Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் லீக் டி20: ஆஸ்திரேலிய உள்ளூர் அணியுடன் பஞ்சாப் மோதல்.. மேக்ஸ்வெல் அதிரடி தொடருமா?

மொகாலி: சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் இன்று, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான ஹோபர்ட் ஹரிகேன்ஸ்-ம் மோதுகின்றன. இந்த ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் விஸ்வரூபம் காண்பித்த அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஜார்ஜ் பெய்லி தலைமையிலான அந்த அணி விளையாடும் முதல் சாம்பியன்ஸ் லீக் போட்டி இதுதான்.

Champions League Twenty20: KXI Punjab will lock horn with Hobart Hurricanes today

சேவாக், விருத்திமான் சாஹா, கிளன் மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர், மனன் வோரா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது பஞ்சாப். ஐபிஎல் போட்டியில் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கிளன் மேக்ஸ்வெல், இந்த போட்டியிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

அதே நேரம், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு. வேகப்பந்து வீச்சில் எல்.பாலாஜி, அக்ஷர் பட்டேல், திசாரா பெரேரா ஆகியோரையே பஞ்சாப் நம்பியுள்ளது.

டிம் பெய்ன் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியிலும் டக் போலிங்கர், பென் ஹில்பெனாஸ், ஷோயிப் மாலிக், சேவியர் டோஹெர்ட்டி போன்ற அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். இந்த அணியும் இப்போதுதான் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக்கில் களம் இறங்கியுள்ளது.

ஜிம்பாப்வே முத்தரப்பு தொடரின்போது ஜான்சனுக்கு விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. எனவே பஞ்சாப் அணியில் அவர் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்காக அவருக்காக சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவரின் காயம் குறித்து அடுத்த வாரம் பரிசோதிக்கப்படும்" என்றார்.

இந்தி நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பஞ்சாப் அணி விவரம்: ஜார்ஜ் பெய்லி, வீரேந்திர சேவாக், அனுரீத் சிங், பர்விந்தர் அவானா, எல்.பாலாஜி, ரிஷி தவன், மிட்செல் ஜான்சன், கரண்வீர் சிங், மன்தீப் சிங், கிளன் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், அக்ஷர் பட்டேல், திசாரா பெரேரா, விருத்திமான் சாஹா, மனன் வோரா.

ஹரிகேன்ஸ் அணி விவரம்: டிம் பெய்ன், டிராவிஸ் பேர்ட், எய்டன் பிளிஸ்ஸார்ட், டக் போலிங்கர், கேமரூன் பாய்ஸ், சேவியர் டோஹெர்ட்டி, பென் டங்க், இவான் குல்பிஸ், பென் ஹில்பெனாஸ், பென் லாஃப்லின், ஜோ மென்னி, டாம் மைக்கேல், சாம் ரெய்ன்பேர்ட், ஷோயிப் மாலிக், ஜொனாதன் வெல்ஸ்.

Story first published: Thursday, September 18, 2014, 16:47 [IST]
Other articles published on Sep 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+