Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2017 சாம்பியன்ஸ் டிராபி... ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்!

லண்டன்: 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் பி பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளன.

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் தொடங்குகின்றன. 18ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

இப்போட்டித் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன.

ஏ பிரிவு

ஏ பிரிவு

ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

பி பிரிவு

பி பிரிவு

பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

தொடர்ந்து இணைந்து வரும் இந்தியா, பாக்.

தொடர்ந்து இணைந்து வரும் இந்தியா, பாக்.

இந்தியாவும் பாகிஸ்தானும் சமீப காலமாக முக்கியப் போட்டிகளில் தொடர்ந்து ஒரே பிரிவிலேயே இடம் பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டி, இந்த ஆண்டு நடந்த உலக டி20 போட்டித் தொடரில் ஒரே பிரிவில் 2 அணிகளும் இடம் பெற்றிருந்தன.

3 ஊர்களில்

3 ஊர்களில்

கார்டிப், பிர்மிங்காம் மற்றும் லண்டன் ஆகிய மூன்று நகரங்களில் போட்டிகள் நடைபெறும். மொத்தம் 15 போட்டிகள் நடைபெறவுள்ளன.

நாக் அவுட் போட்டிகள்

நாக் அவுட் போட்டிகள்

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அங்கு வெல்லும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.

அணி தேர்வு எப்படி?

அணி தேர்வு எப்படி?

2015ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி ஐசிசி ரேங்க் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள்தான் இந்தப் போட்டித் தொடரில் தகுதி பெற்றுள்ளன. மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9வது இடத்தைப் பிடித்ததால் தொடரில் பங்கேற்க முடியவில்லை.

இதுவரை சாம்பியன்கள்

இதுவரை சாம்பியன்கள்

1998ல் தென் ஆப்பிரிக்கா சாம்பியன் ஆனது. அதன் பின்னர் 2000மாவது ஆண்டில் நியூசிலாந்து, 2002ல் இந்தியா - இலங்கை, 2--4ல் மேற்கு இந்தியத் தீவுகள், 2006ல் ஆஸ்திரேலியா, 2009ல் ஆஸ்திரேலிய, 2013ல் இந்தியா சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாக்

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாக்

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் 3 முறை மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 2 போட்டிகளில் வென்றுள்ளது. இந்தியா ஒரு போட்டியில் வென்றுள்ளது.

Story first published: Wednesday, June 1, 2016, 15:32 [IST]
Other articles published on Jun 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+