Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி: இன்று மட்டும் பாகிஸ்தான் தோற்றால் அவ்வளவுதான்.. எத்தனை டிவி பெட்டிகள் உடையுமோ?

லண்டன்: இந்தியாவுடன் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான், இன்று, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணி மற்றும் ரசிகர்களை பொறுத்தளவில் இந்திய அணியுடனான கிரிக்கெட் போட்டி என்பது போருக்கு செல்வதை போலத்தான். நமது நாட்டிலும் கூட வட மாநிலங்கள் பலவற்றில் ரசிகர்கள் இப்படித்தான் போட்டியை பார்க்கிறார்கள்.

இந்த நிலையில்தான் சாம்பியன்ஸ் டிராபி அதாவது மினி உலக கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவிடம் 124 ரன்கள் வித்தியாசத்தில் சரணடைந்தது. இது அந்த நாட்டு வீரர்களை மனதளவில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்

தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்

இப்படிப்பட்ட சூழலில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன், பாகிஸ்தான் மோதுகிறது. தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர்களையும், அதிரடி வீரர்களையும் கொண்ட ஒரு நாடு. உலக ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இலங்கையை தனது முதல் ஆட்டத்தில் ஊதித் தள்ளியது தென் ஆப்பிரிக்கா. மனதளவில் சோகமாக உள்ள பாகிஸ்தான் இதில் வென்றேயாக வேண்டும். இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் போட்டித்தொடரை விட்டு நடையை கட்ட வேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் வீக்

பாகிஸ்தான் வீக்

பாகிஸ்தானை பொறுத்தளவில் அதன் பேட்டிங்கும், ஃபீல்டிங்கும் தென் ஆப்பிரிக்காவோடு ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்கும் நடுவேயான வித்தியாசம்தான். ஃபீல்டிங்கில் பாகிஸ்தான் பழைய இன்சமாம் காலத்து அணியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை அவர்தான் பயிற்சியாளர் என்பதாலோ என்னவோ. இத்தனை ஆண்டுகளில் இந்தியாவின் ஃபீல்டிங் தரம் உயர்ந்ததில் 5ல் ஒரு பங்கு கூட பாகிஸ்தானின் ஃபீல்டிங் தரம் உயரவில்லை.

பேட்டிங் புலிகள்

பேட்டிங் புலிகள்

பேட்டிங்கிலும் அம்லா, டிவில்லியர்ஸ், டிகாக், டுப்ளசிஸ், டுமினி, என மிரட்டலான அணி வகுப்பை நடத்துகிறது தென் ஆப்பிரிக்கா. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களோ பதற்றத்தில் ஆடி கோட்டைவிட்டு வருகிறார்கள். இன்றை மழை பெய்து பாகிஸ்தானை காப்பாற்றினால் தவிர தென் ஆப்பிரிக்காவை அந்த அணி வெல்வது என்பது பெரும் கஷ்டம்.

பந்து வீச்சு டாப்

பந்து வீச்சு டாப்

அஸ்வின் இல்லாத, இந்தியாவின் சாமானிய பவுலிங் அட்டாக்கிற்கே பல்லிளித்த பாகிஸ்தான், ரபடா, இம்ரான் தாகிர் போன்ற ஐசிசி பவுலர் பட்டியலில் டாப்பிலுள்ளவர்களுக்கு எதிராக எப்படி ஆடப்போகிறார்கள் என்ற அச்சம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கே உள்ளது. இந்தியாவுடன் தோற்றதற்காக டிவி பெட்டிகளை உடைத்த ரசிகர்கள் இன்றும் தோற்றால் அணி திரும்பும்போது ஏர்போர்ட் செய்து எதிர்ப்பு கோஷமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Story first published: Wednesday, June 7, 2017, 14:54 [IST]
Other articles published on Jun 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+