For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் டிராபி.. ODI அணியில் 6 வீரர்கள் நீக்கம்.. உலகக்கோப்பை ஆடியவர்களுக்கு இடம் மறுப்பு

மும்பை: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய ஒரு நாள் அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. அந்த அணியில் இடம் பெற்ற வீரர்களில் எத்தனை வீரர்களுக்கு இப்போது இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது? என்பது பற்றி பார்க்கலாம்.

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு இருந்தது. அதன் பின் இந்திய அணியில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான அந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது.

champions trophy 2025 india 2025

அந்த வகையில் 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் தான் இந்திய அணி கடைசியாக சிறப்பாக செயல்பட்டு இருந்தது. அப்போது அணியில் இடம் பெற்று இருந்த ஆறு வீரர்களுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது.

உலகக் கோப்பையில் மாற்று விக்கெட் கீப்பராக இருந்த இஷான் கிஷனுக்கு தற்போது வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்று இருக்கிறார். அடுத்து நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து வந்த சூர்யகுமார் யாதவுக்கு தற்போது இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது.

அவர் 2023 உலகக் கோப்பையிலேயே சரியாக பேட்டிங் செய்யவில்லை என்ற விமர்சனத்தை சந்தித்தார். அதன் பின் ஒரு நாள் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இந்திய அணியில் மாற்று துவக்க வீரராக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல் மற்றும் ஆல் ரவுண்டர்கள் இருப்பதால் மாற்று துவக்க வீரரை தேர்வு செய்து இருக்கிறது இந்திய அணி.

அடுத்து 2023 உலகக்கோப்பையில் இடம் பெற்று இருந்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல வேகப் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோருக்கு இடம் மறுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஷர்துல் தாக்குர் அப்போது ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பாதி தொடரில் சேர்க்கப்பட்டவர்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் - ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட்,

Story first published: Saturday, January 18, 2025, 22:47 [IST]
Other articles published on Jan 18, 2025
English summary
Champions Trophy 2025: 6 Indian players who played in 2023 ODI World cup lost their place
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+