For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகளின் கேப்டன்கள் யார், யார்? முழு பட்டியல்

லாகூர்: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள எட்டு அணிகளின் கேப்டன்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம். 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள எட்டு அணிகள் - இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம்.

Champions Trophy 2025 All eight teams captains list featuring Rohit Sharma Pat Cummins

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட இருக்கிறார். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற ரோகித் சர்மா, 2024 டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

அதை தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார் ரோகித் சர்மா. இந்தத் தொடரிலும் அவர் இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தருவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த உள்ள பாகிஸ்தான் சமீபத்தில் அணியை அறிவித்து இருந்தது. அந்த அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் செயல்பட இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டார். அப்போது இருந்து பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது.

நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் செயல்பட இருக்கிறார். அவர் 2024 ஆம் ஆண்டில் தான் நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் நியூசிலாந்து அணி இதுவரை கலவையான முடிவுகளை பெற்று வந்துள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்பட இருக்கிறார். அவரது கேப்டன்சியில் அந்த அணி 2022 டி20 உலகக் கோப்பையை வென்று இருந்தது.

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் செயல்பட இருக்கிறார். அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று இருந்தது. தற்போது அவரது தலைமையில் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக டெம்பா பவுமா செயல்பட இருக்கிறார். தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக் கோப்பை வெல்லாத நிலையில் இந்த முறையாவது அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.

சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி அசுர வளர்ச்சி அடைந்து இருக்கிறது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெற்று இருக்கிறது. அந்த அணி இந்த முறை பெரிய அணிகளை வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ஹஸ்மதுல்லா ஷாஹிதி செயல்பட இருக்கிறார். அவரது கேப்டன்சியில் தான் அந்த அணி 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையிலும் பங்கேற்று இருந்தது. வங்கதேச அணி அணியின் கேப்டனாக நஜ்முல் உசைன் ஷான்டோ செயல்பட இருக்கிறார். அந்த அணி பெரிய அணிகளை வீழ்த்தினால் அது நிச்சயமாக கவனத்தை ஈர்க்கும்.

Story first published: Sunday, February 2, 2025, 15:01 [IST]
Other articles published on Feb 2, 2025
English summary
Champions Trophy 2025: All eight teams captains list featuring Rohit Sharma, Pat Cummins
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+