துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவில் தொடர் நாயகன் விருது ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணி வீரரான அவர் இந்த தொடரில் அதிக ரன் குவித்தவராக இருந்தார். அதனால் அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்திக்கு தான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என அஸ்வின் தற்போது கூறி இருக்கிறார்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யார் மிகப்பெரிய வித்தியாசத்தையும், புதுமையையும் கொண்டு வந்தார்களோ அவர்களுக்குத்தான் தொடர் நாயகன் விருதை அளித்திருக்க வேண்டும் என அஸ்வின் இது பற்றி கூறியிருக்கிறார்.

வருண் சக்ரவர்த்தி இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே சமயம் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த மேட் ஹென்றி நான்கு போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வருண் சக்ரவர்த்தியை விட அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். எனினும் வருண் சக்ரவர்த்திக்கு தான் தொடர் நாயகன் விருதை அளித்திருக்க வேண்டும் என அஸ்வின் தற்போது கூறி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசுகையில், "நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸை வருண் சக்ரவர்த்தி எப்படி வீழ்த்தினார் என்று பாருங்கள். அப்போது வருண் சக்ரவர்த்தி ஒயிடாக ஓடிச்சென்று பந்தை கூக்ளியாக வீசினார். எனது பார்வையில் வருண் சக்ரவர்த்திக்கு தான் தொடர் நாயகன் விருதை வழங்க வேண்டும்."
"இந்தத் தொடரில் மிகப்பெரிய வித்தியாசத்தை யார் ஏற்படுத்தினார்களோ அவருக்குத்தான் அந்த விருதை வழங்க வேண்டும். வருண் சக்ரவர்த்தி தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்" என அஸ்வின் கூறி இருக்கிறார். இது விவாதத்தை கிளப்பி உள்ளது.
ரச்சின் ரவீந்திரா 4 போட்டிகளில் 263 ரன்கள் குவித்து இருக்கிறார். மேட ஹென்றி 4 போட்டிகளில் 10 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அனால், மூன்று போட்டிகளில் ஆடிய வருண் 9 விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் அவருக்கு தொடர் நாயகன் விருதை வழங்கி இருக்க வேண்டும் என அஸ்வின் சொல்வது சரியா? தவறா?