Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு குஷி.. ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வீரர்கள் நீக்கம்.. கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்

மெல்போர்ன்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்னணி வீரர்கள் பலர் அணியில் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இந்திய ரசிகர்களுக்கு இது நல்ல செய்தியாகவும் அமைந்து உள்ளது.

ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் டிராபி அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா. மாற்று வீரர்: கூப்பர் கோனொலி.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் இந்த தொடரில் விளையாட மாட்டார்கள். பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

Champions Trophy 2025 Steve Smith India 2025

உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடைசி நேரத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக அணியில் இருந்து விலகினார். ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ், ஆரம்பத்தில் அணியில் இடம்பெற்றிருந்தாலும், காயம் காரணமாக சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, சீன் அபோட், அலெக்ஸ் கேரி, ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷேன், மேத்யூ ஷார்ட் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். அதிரடி இளம் வீரர் ஜேக் பிரேசர்-மெக்கர்க் மற்றும் இந்திய வம்சாவளி வீரரான தன்வீர் சங்கா ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

முக்கிய வீரர்கள் பலர் அணியில் இல்லாதது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை அரை இறுதி அல்லது இறுதிப் போட்டியில் இந்திய அணி சந்தித்தால் அப்போது முக்கிய வீரர்கள் இல்லாதது சாதகமாக இருக்கும் என்பது ஒரு சாதகமான விஷயமாக உள்ளது. இந்திய அணியிலும் பும்ரா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் முன்பே விலகிய நிலையில் மிட்செல் ஸ்டார்க் மட்டுமே ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் விலகியது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

அதே நேரத்தில், ஜேக் பிரேசர்-மெக்கர்க் மற்றும் தன்வீர் சங்கா போன்ற இளம் வீரர்கள் அணியில் இடம் பிடித்து உள்ளனர். இந்த இளம் வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Story first published: Wednesday, February 12, 2025, 8:15 [IST]
Other articles published on Feb 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+