Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவர் தான் ரொம்ப முக்கியம்.. ரெய்னா கருத்து

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது குறித்து நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த வீரரின் பங்கு மிகவும் முக்கியம் என்றும் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, நாங்கள் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல யுவராஜ், சேவாக், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

champions trophy 2025 india cricket team hardik pandya suresh raina

இந்த நான்கு வீரர்களும் பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் ஈடுபட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்கள். இந்திய அணியில் ஆறாவது பவுலராக இடம் பிடிக்கும் வீரர் டாப் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும். இதனால் தான் சுழற் பந்து வீசும் வீரர் பேட்டிங் செய்வது என்பது மிகவும் முக்கியம்.

தற்போது சமி அணியில் நீண்ட காயத்திற்கு பிறகு திரும்பி இருக்கிறார். அவர் கடந்த ஒரு ஆண்டாக எந்த ஒரு பெரிய தொடரிலும் விளையாடவில்லை. சிராஜ் தேர்வு செய்யப்படவில்லை இதை போன்று பும்ரா நன்றாக பந்து விஷயம் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்று குல்தீப் காயத்திலிருந்து தற்போது திரும்பி இருக்கிறார்.

இந்த தொடரில் இந்தியாவின் ஓபனிங் பார்ட்னர்ஷிப் என்பது மிகவும் முக்கியம். 2013 சாம்பியன்ஸ் கோபியில் ரோகித் சர்மா,ஷிகர் தவானின் அபாரமான தொடக்கம் நடுவரிசை வீரர்களின் பணியை மிகவும் சுலபமாக்கியது. இதன் மூலம் நாங்கள் சுதந்திரமாக விளையாடினோம். இதேபோன்று குல்தீப் துணையாக எந்த ஒரு சுழற் பந்துவீச்சாளர் இருப்பார் என்பதை பார்க்க வேண்டும்.

ஷமி, ஆர்ஸ்தீப் என இருவரும் சேர்ந்து விளையாடுவார்களா? இல்லை பும்ரா, ஹர்திக் பாண்டியா இருவரும் அணியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளராக இருப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என்னைக் கேட்டால் ஆர்ஸ்தீப் சிங், சமி, பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஜடேஜா அக்சர் பட்டேல் ஆகியோர் இடம் பிடிக்க கூடும். ரோஹித் சர்மா கூட இரண்டு ஓவர்களை வீசலாம்.

ஏனென்றால் துபாய் மைதானம் கொஞ்சம் பெரியது என்பதால் ரோஹித் சர்மா விராட் கோலி போன்றவர்கள் கூட பந்து வீசலாம். இது அனைத்தும் ஒரு கேப்டன் எப்படி திட்டமிடுகிறார் எவ்வாறு யோசிக்கிறார் என்பதை பொறுத்து இருக்கிறது. இந்த சாம்பிள்ஸ் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ரெய்னா கூறியுள்ளார்.

Story first published: Sunday, January 19, 2025, 19:21 [IST]
Other articles published on Jan 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+