Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானிலிருந்து சாம்பியன்ஸ் டிராபி மாற்றமா? ஐசிசி அதிரடி.. போட்டி குறித்து முக்கிய அறிவிப்பு

லாகூர் : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களால் இந்தியா மட்டும் துபாய்க்கு சென்று போட்டிகளை விளையாடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டில் போட்டிகளை நடத்துவதற்காக அங்கு இருக்கும் முக்கிய மைதானங்கள் புனர அமைக்கப்படுகிறது. இதில் கராச்சி கிரிக்கெட் மைதானம் நல்ல நிலையில் இருக்கிறது. ராவில் பிண்டி மற்றும் லாகூர் கிரிக்கெட் மைதானங்கள் நவீன ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

champions trophy 2025 pakistan cricket india cricket team


ஆனால் சாம்பியன்ஸ் கோப்பைக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மைதானங்கள் இன்னும் முழுமையாக வில்லை. இதனால் ஐசிசி கொடுத்த கெடுவையும் பாகிஸ்தான் மைதான கட்டுமான பணிகளை முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராவல்பிண்டியில் மைதானத்தில் இருக்கைகள் மாற்றும் பணி நிறைவு கட்டத்தை விட்டு இருக்கிறது.

லாகூர் கடாபி மைதானத்தில் 98 சதவீத பணிகள் முடிவடைந்து இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் வரும் 30ஆம் தேதிக்குள் மைதானம் கட்டுமான பணிகளை முடிக்கும் படி ஐசிசி இறுதிக்கெடுவை விதித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை கடைசி கட்டத்தில் வேறு நாட்டுக்கு மாற்ற முடியாது என்றும் ஐசிசி நிர்வாகிகள் கூறி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விலையை ஐசிசி அறிவித்திருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பையில் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகள் ஐசிசிக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெற்றிகரமாக வேண்டும் என்பதற்காக டிக்கெட் விலையை அதிரடியாக icc குறைத்து இருக்கிறது.

அதன்படி குறைந்தபட்ச டிக்கெட் விலையாக இந்திய ரூபாய் மதிப்பில் 310 ரூபாயாகவும், அடுத்த விலை 465 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் ஐசிசி அறிவித்திருக்கிறது. இந்த டிக்கெட் விற்பனையை இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. இதன் மூலம் 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 27, 2025, 20:30 [IST]
Other articles published on Jan 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+