Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை2025 - ஜெய்ஷா பதவிக்கு வருவதற்குள் முடிவு.. 29ஆம் தேதி ஐசிசி முக்கிய கூட்டம்

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடுவது தொடர்பாக ஐசிசி நிர்வாகிகள் வரும் நவம்பர் 29ஆம் தேதி கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். 2025 ஆம் ஆண்டு சாமியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தொடருக்கான அட்டவணை நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது. இந்த சூழலில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

champions trophy 2025 ind vs pak bcci

இதற்காக கோடி கணக்கில் செலவு செய்து, மைதானத்தை புனரமைக்கும் பணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் வந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட மாட்டோம் என்று பிசிசிஐ அறிவித்தது. அது மட்டும் அல்லாமல் தாங்கள் விளையாடும் போட்டிகளை வேறு நாட்டுக்கு மாற்ற பிசிசிஐ வலியுறுத்தியது.

எனினும் இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்றினால் தாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த மாட்டோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்தது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து விலகுவோம் என்றும் கூறியிருந்தது.

இந்த தருணத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடவில்லை என்றால் ஐசிசி மீது வழக்கு தொடர்வோம் என்று போட்டியை ஒளிபரப்பும் டிஸ்னி நிறுவனமும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவது தொடர்பாக வரும் நவம்பர் 29ஆம் தேதி ஐசிசி நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்த போகின்றனர்.

டிசம்பர் 2ஆம் தேதி ஐசிசி யின் புதிய தலைவராக ஜெயிஷா வர இருக்கிறார். அதற்குள் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதனால் ஜெய் சா வருவதற்கு முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என ஐ சி சி யில் உள்ள ஒரு தரப்பு கூடுகிறது. இதனால் நவம்பர் 29ஆம் தேதிக்கு பிறகு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, November 27, 2024, 7:45 [IST]
Other articles published on Nov 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+