Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

154 டாட் பால்கள்.. களத்தில் தூங்கிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள்.. புது ரெக்கார்டு படைத்த கிவி பாய்ஸ்!

துபாய்: இந்திய அணிக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி மொத்தமாக 154 டாட் பால்களை விளையாடி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் அதிக டாட் பால்களை விளையாடி நியூசிலாந்து அணி புதிய சாதனை படைத்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்களை குவித்துள்ளது. அதிகபட்சமாக 101 பந்துகளில் 63 ரன்களும், பிரேஸ்வெல் 40 பந்துகளில் 53 ரன்களும் விளாசினர்.

ind vs nz champions trophy final Virat Kohli

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. ஏனென்றால் முதல் 10 ஓவர்களில் 7 ரன் ரேட்டிலும், கடைசி 10 ஓவர்களில் 7.5 ரன் ரேட்டிலும் நியூசிலாந்து அணி விளையாடி இருக்கிறது.

11 முதல் 40 வரையிலான மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணியின் ரன் ரேட் வெறும் 3 முதல் 4க்குள் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 38 ஓவர்கள் ஸ்பின்னர்களை கொண்டு, 12 ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டும் பவுலிங் செய்திருக்கிறது. அதேபோல் இந்த இன்னிங்ஸில் மட்டும் நியூசிலாந்து அணி மொத்தமாக 154 டாட் பால்களை விளையாடி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமாக ஆடியுள்ள 50 ஓவர்களில் சுமார் 26 ஓவர்களை நியூசிலாந்து அணி டாட் பால்களை ஆடி இருக்கிறது. அதிலும் அதிகபட்சமாக டேரல் மிட்சல் மட்டுமே 53 டாட் பால்களை விளையாடி இருக்கிறார். இதனால் ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி அதிக டாட் பால்களை ஆடி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல் ஐசிசி தொடரின் இறுதிப்போட்டியில் அதிக டாட் பால்களை ஆடிய அணி என்ற சாதனையையும் நியூசிலாந்து படைத்துள்ளது. துபாய் மைதானத்தின் பிட்ச் தேய்மானம் அடைந்தால் ஸ்லோவாக மாறும் என்பதால், நியூசிலாந்து அணி அதிக டாட் பால்களை ஆடி இருப்பதாக பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறியதே டாட் பால்களை ஆடியதற்கு காரணம் என்று இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Sunday, March 9, 2025, 18:41 [IST]
Other articles published on Mar 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+