Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர் அபிஷேக் சர்மா அணிந்த டிரஸ், ஷூ விலை எவ்வளவு தெரியுமா? நம்ம ஆண்டு சம்பளத்தையே மிஞ்சிடும்

துபாய்: இந்திய கிரிக்கெட்டில் தற்போது தவிர்க்க முடியாத இளம் நட்சத்திர வீரராக அபிஷேக் ஷர்மா விளங்கி வருகிறார். டி20 தொடரில் பட்டையை கிளப்பும் அபிஷேக் ஷர்மா இதுவரை இரண்டு சதம் அடித்து அசத்தியுள்ளார். அபிஷேக் சர்மாவின் இந்த ஆட்டத்தை போற்றும் ரசிகர்கள் அவரை ஒருநாள் கிரிக்கெட்டிலும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக அபிஷேக் ஷர்மா விளையாடி வரும் நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பார்ப்பதற்காக அண்மையில் அவர் துபாய் வந்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை துபாய் கிரிக்கெட் மைதானத்தில் அமர்ந்து அபிஷேக் ஷர்மா பார்த்தார்.

Champions Trophy 2025 India cricket team Abhishek Sharma

அப்போது அவர் அணிந்திருந்த டிரஸ் மற்றும் ஷூ, வாட்ச் ஆகியவற்றின் விலை தற்போது ரசிகர்களை தலை சுத்த வைத்திருக்கிறது. 24 வயது ஆன அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடர் மூலம் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை பார்க்க வந்த அபிஷேக் ஷர்மா, அணிந்திருந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

நமது ஊர் பணத்திற்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் ஆகும். இதே போல் அபிஷேக் ஷர்மா கையில் அணிந்திருந்த வாட்ச் ரோலக்ஸ் மாஸ்டர் வாட்ச் ஆகும். அதன் விலை 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். இதேபோன்று அபிஷேக் சர்மா அணிந்திருந்த ஷூ லூயிஸ் நிறுவனத்தை சேர்ந்தது. அதன் விலை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆகும். இதேபோன்று அவர் சட்டையில் அணிந்திருந்த கண்ணாடியின் விலை கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.

இப்படி மொத்தமாக அபிஷேக் ஷர்மா அணிந்திருந்த டிரஸ் கோடின் மொத்த மதிப்பு 13 லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. திறமையும் உழைப்பும் இருக்கும் நிலையில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால், இதுபோல் ஆடம்பர வாழ்க்கையை வாழலாம் என்பதற்கு அபிஷேக் ஷர்மா ஒரு உதாரணமாக இருக்கிறார்.

24 வயதில் சாதாரண ஐடி நிறுவனத்தில் ஒரு இளைஞர் இணைந்தார் என்றால் அவருடைய ஆண்டு சம்பளம் 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக தான் இருக்கும். ஆனால் விளையாட்டு உலகில் கலக்கி வரும் அபிஷேக் சர்மா அணிந்திருந்த ட்ரெஸ்ஸின் விலையே 13 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது. இதேபோன்று அண்மையில் ஹர்திக் பாண்டியா தனது கையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான வாட்ச்சை அணிந்திருந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 1, 2025, 19:14 [IST]
Other articles published on Mar 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+