சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு தான் ஆபத்து.. ஆதாரத்துடன் எடுத்து கூறிய முகமது கெயிப்
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கிய தொடராக சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெறுகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது.இந்த போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கெயிப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது கையிப், "ரோஹித் சர்மாவும்,விராட் கோலியின் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு மிகவும் முக்கியமான வீரராக இருப்பார்கள்.50 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது என் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை.

ஆனால் அதன் பிறகு டி20 உலக கோப்பையில் வெல்வோம் என இந்த இரண்டு வீரர்களும் தீவிரமாக இருந்தார்கள். அதேபோல் வென்றும் காட்டி இருக்கிறார்கள். தற்போது மீண்டும் நாம் சாம்பியன்ஸ் கோப்பையில் வெல்லம் வேண்டும் என்றால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பேட்டிங் மிகவும் முக்கியம்.
ரோகித்துக்கு 37 வயது ஆகிறது, விராட் கோலிக்கு 36 வயதாகிறது. எனவே இருவரும் இன்னும் நிறைய காலமெல்லாம் இந்திய அணிக்காக விளையாட மாட்டார்கள். அவர்கள் எவ்வளவு விளையாடுகிறார்களோ அந்த அளவுக்கு ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை இந்த இரண்டு வீரர்களுக்கும் வழங்க வேண்டும். இந்த இரண்டு வீரர்களும் நன்றாக விளையாடி ரன்களை சேர்த்தால் மட்டுமே இந்திய அணியால் வெற்றி பெற முடியும்.
ஏனென்றால் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். விராட் கோலியை பொறுத்தவரை அவர் கடைசி வரை களத்தில் நின்று ரன்களை சேர்க்க வேண்டும். துபாய் ஆடுகளம் ரன் குவிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். கடந்த 10 போட்டிகளில் துபாயில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 198 ரன்கள் தான்.
எனவே இந்தியா இந்த ஆடுகளத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் பாகிஸ்தானை எடுத்துக்கொண்டால் அங்கு ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். அங்கு கடைசியாக நடைபெற்ற பத்து போட்டிகளின் சராசரி எடுத்துக் கொண்டால் அது கிட்டத்தட்ட 300 ரன்களை நெருங்குகிறது. ஆனால் துபாயில் வெறும் அது 200 தான். எனவே தென்னாப்பிரிக்கா வீரர்கள் எல்லாம் பாகிஸ்தான் மைதானங்களில் 450 ரன்கள் பாகிஸ்தானில் நடைபெறும். போட்டிகளில் எந்த அணி நன்றாகப் பந்து வீசுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என முகமது கைஃப் கூறியுள்ளார்.
Story first published: Wednesday, January 22, 2025, 9:49 [IST]
Other articles published on Jan 22, 2025


Click it and Unblock the Notifications