சாம்பியன்ஸ் டிராபி 2025- அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்
மும்பை: சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது அரையிறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் இடம் பிடித்துள்ளன.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரன் விருந்துகளும் விக்கெட் வேட்டையும் நடந்திருக்கிறது. லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து வீரர் பென் டக்கட் இருக்கிறார். மூன்று போட்டியில் விளையாடியுள்ள பென் டக்கட் 227 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 165 ரன்கள் அடங்கும். இதேபோன்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், 3 போட்டிகளில் விளையாடி 225 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 120 ரன்கள் அடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் இருக்கிறார். இவர் மூன்று போட்டிகளில் 216 ரன்கள் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 177 ரன்கள் அடித்துள்ளார். இந்த மூன்று வீரர்களுமே அரை இறுதியில் பங்கேற்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான்காவது இடத்தில் நியூசிலாந்து வீரர் டாம் லாத்தம் மூன்று போட்டிகளில் விளையாடி 187 ரன்கள் அடித்துள்ளார்.
ஐந்தாவது இடத்தில் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார். மூன்று போட்டியில் விளையாடி 150 ரன்கள் அடித்துள்ளார். ஆறாவது இடத்தில் கில் உள்ளார். மூன்று போட்டிகளில் விளையாடி 149 ரன்களுடன் இருக்கிறார். ஏழாம் இடத்தில் விராட் கோலி 3 போட்டிகளில் விளையாடி 133 ரன்களும் அடித்துள்ளனர். இதேபோன்று அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி மூன்று போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதேபோன்று இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா உமர்
சாய் 3 போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் பென் டக்கட், நியூசிலாந்து வீரர் வில்லியம் ஒ ரூரிக்கி, இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் தலா ஆறு விக்கெட்டுகள் பிடித்து மூன்றாவது இடத்தை சரிசமமாக பகிர்ந்துள்ளார். இது போன்று நான்காம் இடத்தில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி, தென்னாப்பிரிக்கா வீரர் மோல்டர் மற்றும் இந்திய வீரர் முஹமது சமி, இந்திய வீரர் குல்தீப் யாதவ், நியூசிலாந்து வீரர் பிரேஸ்வெல் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications