Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி.. பாகிஸ்தான் செல்ல மறுத்து லீவு கேட்ட மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் ஸ்ரீநாத், நிதின் மேனன்

லாகூர்: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அம்பயர் நிதின் மேனனும், மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் ஸ்ரீநாத்தும் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. நிதின் மேனன் தனது முடிவுக்கு தனிப்பட்ட காரணம் என்று கூறி இருக்கிறார்,

மேட்ச் ரெஃப்ரீ ஜவகல் ஸ்ரீநாத் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார். முன்னதாக இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தானில் விளையாட மறுத்து இருந்தது. அதனால், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்த தொடரை "ஹைபிரிட்" முறையில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

champions trophy 2025 india 2025

சாம்பியன்ஸ் டிராபி போன்ற பல அணிகள் பங்கேற்கும் தொடர்களில் அம்பயர்கள் தங்கள் சொந்த அணியின் போட்டிகளில் பணியாற்ற ஐசிசி அனுமதிப்பதில்லை. அதனால் நிதின் மேனன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் துபாயில் இந்தியா ஆடும் போட்டிகளில் மட்டும் பணியாற்றவும் முடியாது.

இதற்கிடையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேட்ச் ரெஃப்ரீயாக இருக்கும் ஜவகல் ஸ்ரீநாத், தான் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க மாட்டேன் என்பதை உறுதிப்படுத்தினார். அவர் சிறிது காலமாக தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் மேட்ச் ரெஃப்ரீயாக செயல்பட வேண்டி பல்வேறு நாடுகள் மற்றும் ஊர்களுக்கு பயணம் செய்து வருவதை காரணமாகக் கூறி விடுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இவர்கள் இருவரும் விலகிய நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை சேர்ந்த அம்பயரோ, மேட்ச் ரெஃப்ரீயோ பங்கேற்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க உள்ள மற்ற அம்பயர்கள் மற்றும் மேட்ச் ரெஃப்ரீ பட்டியல் -

2025 சாம்பியன்ஸ் டிராபி அம்பயர்களின் பட்டியல்: குமார் தர்மசேனா, கிறிஸ் கஃபேனி, மைக்கேல் கோஃப், அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பரோ, அஹ்சன் ராசா, பால் ரீஃபில், ஷரஃபுத்தௌலா இப்னே ஷாஹித், ரோட்னி டக்கர், அலெக்ஸ் வார்ஃப், ஜோயல் வில்சன்

சாம்பியன்ஸ் டிராபி மேட்ச் ரெஃப்ரீ பட்டியல்: டேவிட் பூன், ரஞ்சன் மதுகல்லே, ஆண்ட்ரூ பைகிராப்ட்

Story first published: Thursday, February 6, 2025, 8:35 [IST]
Other articles published on Feb 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+