Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் கோப்பை- ராகுல், சூர்யகுமாருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான்

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்குமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு வரமாட்டோம் என்று இந்திய அணி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகளை வேறு நாட்டில் நடத்த பாகிஸ்தானும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஒரே அடியாக தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

champions trophy blind t20 world cup india cricket team pakistan 2025

இந்த நிலையில் பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியை கடுமையாக சாடி இருக்கும் நிலையில் தற்போதைய பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனான முகமது ரிஸ்வான் உருக்கமான வேண்டுகோள் வைத்து இந்திய ரசிகர்களின் இதயத்தை வென்றிருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ராகுல், சூரியகுமார் போன்ற வீரர்களை பாகிஸ்தான் மக்கள் மனதார வரவேற்பார்கள். பாகிஸ்தானுக்கு யாரெல்லாம் வர விரும்புகிறார்களோ அவர்களை நாங்கள் மனதார வரவேற்போம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு கிடையாது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு ஆகும்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்பிக்கை கொள்கின்றேன். தனிப்பட்ட முறையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் போட்டி பங்கேற்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று ரிஸ்வான் கூறியுள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்றால் இனி இந்தியாவில் நடைபெற உள்ள எந்த ஒரு ஐசிசி தொடரிலும் பாகிஸ்தான் கண்டிப்பாக வந்து விளையாடாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீண்டும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கடந்த 2023 50 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஆனால் தற்போது இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் வர தயக்கம் காட்டி வருவது பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பான சுமூக தீர்வு அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, November 13, 2024, 17:04 [IST]
Other articles published on Nov 13, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+