Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பிக்ஸிங் செய்து கிடைத்த வெற்றி” இந்தியாவின் வெற்றியை ஏற்க முடியாமல் கதறிய பாகிஸ்தான் ரசிகர்கள்

துபாய்: இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றதை பாகிஸ்தான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ மற்றும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர் இந்திய அணி பிட்ச் பிக்ஸிங் செய்து ஜெயித்ததாக நேரடியாகவே பழி சுமத்தி உள்ளனர்.

அதாவது போட்டி அட்டவணை மற்றும் ஆடுகளங்களை இந்திய அணி பிக்ஸ் செய்து இந்த கோப்பையை ஜெயித்திருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்திய அணியின் 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை ஏற்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் எப்படி எல்லாம் சமூக வலைதளங்களில் தங்கள் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தி உள்ளனர் என்று பார்க்கலாம். அவர்கள் வெளியிட்டுள்ள சில பதிவுகளை இங்கே பார்க்கலாம்.

Champions Trophy 2025 India vs Pakistan Match Fixing Social Media Cricket Fans 2025

"இந்தியா தனது சொந்த மைதானத்தில் விளையாடுகிறது. துபாய் அவர்களுக்கு பொதுவான மைதானம் என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியாதது. இந்த மைதானத்திற்கு ஏற்றவாறு அவர்கள் அணியை தேர்வு செய்து இருக்கிறார்கள். ஒருவேளை நியூசிலாந்தில் நடக்கும் தொடருக்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் ஒரு அணி தனது போட்டிகள் அனைத்தையும் விளையாடினால் எப்படி இருக்குமோ அதுதான் இங்கேயும் நடந்துள்ளது" என ஒரு பாகிஸ்தான் ரசிகர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

மற்றொரு பாகிஸ்தான் ரசிகரோ, "இறுதிப் போட்டிக்கு இந்திய அணிக்கு ஏற்ற வகையிலான பிட்ச்சை ஐசிசி தயார் செய்து இருக்கிறது. நிச்சயமாக இது போட்டி அட்டவணை பிக்ஸிங் மற்றும் பிட்ச் பிக்ஸிங் தான். பிசிசிஐ சரியான வியூகம் வகுத்து வென்று இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.

"இதுவரை நான் பார்த்ததிலேயே மிக மோசமான வெற்றி இதுதான். இந்த வெற்றியை கொண்டாடுபவர்கள் அவமானப்பட வேண்டும். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆடுகளங்களை மாற்றி இருக்கிறார்கள்" என்று ஒரு பாகிஸ்தான் ரசிகர் குற்றம் சுமத்தி இருக்கிறார். இதுபோல சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகளை பாகிஸ்தான் ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானில் நடைபெற்றது. அனால், பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்திய அணியின் அனைத்து போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டன. இறுதி மற்றும் அரையிறுதி போட்டிகளும் துபாயில் தான் நடந்தது. அதைத்தான் அவர்கள் இவ்வாறு விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. மேலும் இந்த தொடரின் மூன்று போட்டிகள் பாகிஸ்தானில் மழையால் நடைபெறாமல் கைவிடப்பட்டன. இப்படி பாகிஸ்தானுக்கு பல்வேறு வகைகளில் பின்னடைவு ஏற்பட்டது. மறுபுறம் இந்திய அணியும் வெற்றி மேல் வெற்றியாக பெற்று கடைசியில் கோப்பையையும் வென்று இருக்கிறது. இந்த நிகழ்வுகளை ஏற்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் எரிச்சல் அடைந்து இவ்வாறு பதிவுகளை வெளியிட்டு உள்ளனர்.

Story first published: Tuesday, March 11, 2025, 11:56 [IST]
Other articles published on Mar 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+