மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதை போன்று இந்திய அணியில் நடத்தப்படும் எந்தவித சர்வதேச கிரிக்கெட்டு தொடரிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்றும், அதுவும் ஹைபிரிட் மாடல் முறைப்படி தான் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையும் ஏற்க பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ள வீடியோவில் ஹைபிரிட் மாடல் முறைப்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறுவதால் பாகிஸ்தானுக்கு எவ்வித பண இழப்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு நிதி அபாயம் எதுவும் ஏற்படவில்லை. பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய பணம் கண்டிப்பாக கிடைத்திருக்கும். ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும்,பின்னர் அவர்கள் கண்டிப்பாக ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் வெறும் கையோடு சென்று இருக்க மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இந்தியாவை பழிவாங்கும் முயற்சியில் பாகிஸ்தானும் ஈடுபட்டு இருக்கிறது. தற்போது 2027 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு தொடரிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானும் ஹைபிரிட் மாடலை வேண்டுகிறது. பாகிஸ்தானும் தற்போது மூன்றாவது நாட்டில் இந்தியாவுடன் விளையாடும்.
எனினும் ஹைபிரிட் முறைப்படி போட்டிகளை நடத்துவதால் பாகிஸ்தானுக்கு சுமார் 50 கோடி அளவு கூடுதல் பணம் தான் கிடைக்கும்.சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக ஐசிசி 600 கோடி ரூபாய் வழங்கிய நிலையில் தற்போது கூடுதலாக 50 கோடி ரூபாய் வழங்கும். பாகிஸ்தானுக்கு இதில் ஒரே ஒரு நஷ்டம் என்றால் இந்தியா போட்டியை பார்ப்பதற்காக பல வெளிநாட்டு ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு வந்திருப்பார்கள்.
அது மட்டும் தற்போது பாகிஸ்தானுக்கு இழப்பை கொடுக்கும். எனினும் நேரடியான இழப்பை பாகிஸ்தான் சந்திக்காது. இதுபோன்று இந்தியா நடத்தும் 2026 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் வராது. இன்னும் இலங்கை இந்த போட்டியை நடத்த அதிக வாய்ப்பு இருக்கிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.