Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: பாதி போட்டியிலேயே கதறி அழுத பாகிஸ்தான் வீரர்.. தவித்த சக வீரர்கள்.. என்ன நடந்தது?

கராச்சி: 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் ஃபக்கர் ஜமான் போட்டியின் இடையே கதறி அழுதார். அவரை தேற்ற முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும், அவர் முதல் போட்டியிலேயே காயமடைந்து தொடரிலிருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஃபாக்கர் ஜமான் ஃபீல்டிங் செய்யும்போது காயம் அடைந்தார். போட்டி துவங்கிய உடன் இரண்டாவது பந்திலேயே அவர் ஃபீல்டிங் செய்யும் போது தடுமாறினார். அப்போது அவரது கால் மற்றும் இடுப்பு பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டதால் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

IND vs PAK Champions Trophy 2025 Fakhar Zaman 2025

பின்னர், பேட்டிங் செய்யும்போது ரன் ஓட முடியாத நிலையிலும் 41 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ஆட்டம் இழந்து வெளியேறியபோது கண்ணீர் மல்க நடந்து சென்றார். ஓய்வறைக்குச் சென்று தனது முகத்தை மூடிக்கொண்டு அழுதார். அவரை பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர்களும் ஷாஹீன் அஃப்ரிடியும் தேற்ற முயற்சி செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளன.

பல மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவரை ஒதுக்கி வைத்து இருந்தது. சாம்பியன்ஸ் டிராபி நெருங்கிய நிலையில் தான் ஃபாக்கர் ஜமானுக்கு மீண்டும் அணியில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பும் காயத்தால் பறிபோனதால் அவர் இவ்வாறு அழுதிருக்கலாம்.

IND vs PAK Champions Trophy 2025 Fakhar Zaman 2025

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த போட்டி முடிந்த பின்னர், ஃபாக்கர் ஜமான் இந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக பாகிஸ்தான் அணி அறிவித்தது. அவருக்கு பதிலாக மற்றொரு துவக்க வீரரான இமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்த மாற்றத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்பு கொண்டுள்ளது.

சிறப்பாக ஆடி வந்த ஃபாக்கர் ஜமான் சாம்பியன்ஸ் டிராபி என்னும் முக்கிய தொடரில் காயம் அடைந்து வெளியேறியிருப்பது பாகிஸ்தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணி அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கும் நிலையில், இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது.

ஃபாக்கர் ஜமான் காயம் அடைந்தது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. துவக்க வீரராக களமிறங்கும் அவர், அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவரது காயம் பாகிஸ்தானின் பேட்டிங் திறனை பாதிக்கும். ஃபாக்கர் ஜமான் குணமடைய சிறிது காலம் ஆகலாம். அவர் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இமாம் உல் ஹக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Story first published: Friday, February 21, 2025, 20:02 [IST]
Other articles published on Feb 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+