Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி - இந்திய அணியின் அதிரடி வீரருக்கு காயம்.. பயிற்சியில் பந்து தாக்கியதால் சோகம்

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி துபாய்க்கு புறப்பட்டு அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சாம்பியன் டிராபி தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமிவில் பயிற்சி செய்து வருகிறார்கள்.

Champions Trophy 2025 India cricket team Rishabh pant

இந்திய அணி வரும் 20ஆம் தேதி தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்திய அணி எந்த ஒரு பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்காமல் இந்த தொடரில் விளையாடுகிறது.
இந்த சூழலில் நேற்று பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஹர்திக் அடித்த பந்து மைதானத்தில் நின்று கொண்டிருந்த இந்தியாவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் மீது தாக்கியது. பண்டின் காலில் பந்து தாக்கியதால் அவர் சுருண்டு மைதானத்திலே விழுந்து வலியால் துடித்தார். இதனை அடுத்து ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஓடி சென்று ரிஷப் பந்தை பார்த்தனர்.

முன்னெடுத்து அங்கிருந்து ஓடி வந்த இந்திய அணியின் மருத்துவக் குழு பண்ட்க்கு ஐஸ் கட்டிகளை வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு எழுந்து நின்ற ரிஷப் பண்ட் காலை நொண்டியப்படியே பெவிலியனுக்கு சென்றார். எனினும் அரை மணி நேரம் கழித்து பண்ட்,மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார்.

ஆனால் அப்போதும் அவர் வலியால் அவதிப்பட்டார். இதன் காரணமாக பண்ட், சாம்பியன்ஸ் சாப்பிட்டு தொடரில் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கே எல் ராகுலை தான் தாங்கள் முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்துவோம் என கம்பீர் ஏற்கனவே கூறிவிட்டார்.

இதனால் கே.எல். ராகுலின் பேட்டிங் சரி இல்லை என்றாலும், அவருக்கு காயம் ஏற்பட்டாலும் ரிஷப் பண்ட் தான் மாற்று வீரராக அணியில் இருக்கிறார். தற்போது பண்ட்க்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏற்கனவே பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் காலில் பெரிய அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 17, 2025, 9:05 [IST]
Other articles published on Feb 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+