சஞ்சு சாம்சன் வாழ்கையை கேரள கிரிக்கெட் சங்கம் கெடுக்கிறது.. ஈகோ கூடாது.. சசி தரூர் கடும் தாக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சேர்க்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் கேரள கிரிக்கெட் சங்கம் செய்த செயல்தான் என்று கூறப்படுகிறது.
டி20 கிரிக்கெட்டில் சதத்திற்கு மேல் சதமாக சஞ்சு சாம்சன் அடித்து வரும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இடம்பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து இருந்தார்.

ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற்ற பயிற்சி முகாமில் சஞ்சு சாம்சன் பங்கேற்காததால் அவரை கேரள அணியில் இருந்து அம்மாநில கிரிக்கெட் சங்கம் அதிரடியாக நீக்கியது.
இதன் காரணமாக தான் சஞ்சு சாம்சன் ஒருநாள் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் கேரளா கிரிக்கெட் சங்கத்தை சாடி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர்,கேரள கிரிக்கெட் சங்கத்தின் செயல் எனக்கு மன வருத்தத்தை கொடுக்கிறது.
சஞ்சு சாம்சன் ஏற்கனவே தம்மால் பயிற்சி முகாமில் பங்கேற்க முடியாது என்று கூறி கடிதம் எழுதி இருந்திருக்கிறார். ஆனால் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் கேரள கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை அணியிலிருந்து அதிரடியாக நீக்கியது. இதன் மூலம் தற்போது சஞ்சு சாம்சன் இந்திய அணியும் சேர்க்கப்படவில்லை.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சஞ்சு சாம்சன் 212 ரன்கள் அடித்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய சராசரி 56 என்ற அளவில் இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் சந்து சாம்சன் சதம் அடித்திருக்கிறார் இப்படி திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை ஈகோ காரணமாக கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கெடுக்கிறார்கள். சஞ்சு சம்சனை நீக்கியதன் மூலம் என்ன ஆயிற்று? விஜய் ஹசாரே கோப்பை காலிறுதி சுற்றுக்கு கூட கேரளா அணியால் தகுதி பெற முடியவில்லை.இதன் மூலம் யாருக்கு பாதிப்பு என்று சசி தரும் கடுமையான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
Story first published: Sunday, January 19, 2025, 13:13 [IST]
Other articles published on Jan 19, 2025


Click it and Unblock the Notifications