Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. தொடரில் தடுமாறிய கில், மீண்டும் ஃபார்ம்க்கு திரும்பியது எப்படி? காரணமே இந்த 47 வயது வீரர் தான்

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கில் அபாரமாக விளையாடி வருகிறார். அதற்கு முன்பு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட கில் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கில் தடுமாறிய நிலையில் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் கில் தற்போது அபாரமாக விளையாடி வருகிறார். இந்த மாற்றத்திற்கு காரணம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Champions Trophy 2025 shubman gill India cricket team Virat kohli

ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து கில் நாடு திரும்பியவுடன் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடினார்.அப்போது கர்நாடகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கில் சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து சுப்மன் கில் தன்னுடைய பார்மை மீட்டு ரன்களை குவித்து வருகிறார். பஞ்சாப், ரஞ்சி அணியின் பயிற்சியாளராக வசீம் ஜாபர் செயல்பட்ட நிலையில் அவருடன் கில் பணியாற்றி இருக்கிறார்.

இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள வசீம் ஜாபர், "ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் கில் கடுமையான முறையில் தயாராகி வருவார். வலைப் பயிற்சியில் 30 முதல் 45 நிமிடம் வரை அவர் ஆட்டத்திற்கு முன்பு பயிற்சி செய்வார். அவருக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும்.அதிக பந்துகளை எதிர்கொள்ள ஆசைப்படுவார்."

"ஒரு இளம் வீரர் வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவிட நினைத்தால் அது உண்மையிலேயே நல்ல விஷயம். ரஞ்சிப் போட்டியில் முதல் இன்னிங்சில் கில் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆடுகளம் டென்னிஸ் பந்தை போல் நல்ல பவுன்ஸ் ஆகி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அவர் ஆடுகளத்தில் அதிக நேரம் செலவிட்டு அபாரமாக விளையாடினார்."

"பார்மில் இல்லை என்றாலும் களத்தில் பந்துகளை அதிகமாக வீணடிக்கும் ஓயும்
பழக்கம் கில்லுக்கு கிடையாது. மோசமான பந்துகளை அடித்து ரன்களை குவிப்பது தான் கில்லின் வழக்கம். இதன் மூலம் கில் சதம் அடித்தார். நாங்கள் 231 ரன்கள் அடித்திருந்தோம். அதில் 102 ரன்கள் கில் அடித்தார். இதன் மூலம் அவர் தன்னுடைய பார்மை மீட்டார். இதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் கூட அவர் சதம் அடித்தார்."

"இதன் மூலம் அவருடைய நம்பிக்கை திரும்ப வந்துவிட்டது. இதை தான் நான் கில்லிடமிருந்து எதிர்பார்த்தேன். தனக்குத்தானே பெரிய அளவிலான உச்ச வரம்பை கில் நிர்ணயித்திருக்கிறார். நான் ஆஸ்திரேலிய தொடரில் என்ன நடந்தது எல்லாம் என்பது குறித்து அவரிடம் பேசவில்லை. நான் சின்ன சின்ன பேட்டிங் உத்திகளை மட்டும் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தினேன். நான் சொல்வதை கில் நன்றாக புரிந்து கொண்டார். கிரிக்கெட்டை எப்போதுமே அவர் சீரியஸாக தான் எடுத்துக் கொள்வார் என்று வசீம் ஜாபர் பாராட்டியுள்ளார். 52 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கில் மொத்தமாக 2734 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் அவருடைய சராசரி 62 ஆகும்.

Story first published: Tuesday, February 25, 2025, 20:59 [IST]
Other articles published on Feb 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+