Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து 13 வீரர்கள் விலகல்.. ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கும் பாதிப்பு

துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் பல அணிகளின் முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்கள். இப்படி காயம் காரணமாக விலகிய வீரர்களை வைத்து ஒரு பிளேயிங் லெவனை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர் ரசிகர்கள்.

எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

Champions Trophy 2025 India

சாம்பியன்ஸ் டிராபியில் அதிக வீரர்களை இழந்தது ஆஸ்திரேலியா தான். அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கணுக்கால் காயத்தால் விலகி இருக்கிறார். ஜோஷ் ஹேஸல்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகிய மற்ற வேகப்பந்து வீச்சாளர்களும் காயங்களால் விலகி உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரும் விலகி உள்ளனர். இந்த ஐவருமே வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி 5 வீரர்களை இழந்து இருக்கிறது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் தூணாக இருந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கிறார். இது இந்திய அணியின் பலத்தில் சுமார் 20-30 சதவீதத்தை இழந்ததற்கு சமம் ஆகும்.

தென்னாப்பிரிக்க அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஜெரால்ட் கோட்ஸி விலகி உள்ளனர்.

இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் டக்கெட் விலகியுள்ளனர்.

பாகிஸ்தான் அணியில் சலீம் அயூப் விலகி இருக்கிறார். அவர் துவக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஏமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான ரஷீத் கான் மற்றும் முஜீபுர் ரஹ்மான் விலகி உள்ளனர். இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Sunday, February 16, 2025, 10:13 [IST]
Other articles published on Feb 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+