Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி- ஜெய்ஷா காட்டிய பெரிய மனசு.. கொஞ்சமும் எதிர்பார்க்காத பாகிஸ்தான்.. என்ன நடந்தது?

மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் கராச்சி,லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மூன்று மைதானங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஹைப்ரிட் மாடல் முறைப்படி துபாயில் நடக்கின்றது.

இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய மைதானங்களை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட இந்த பணிகள் ஐசிசி கொடுத்த காலக் கெடுக்குள் முடிவடையவில்லை.

champions trophy 2025 ind vs pak jay shah

இதனால் இந்த தொடர் வேறு நாட்டுக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மைதானங்களில் 99 சதவீத பணிகளை முடித்து இருக்கிறது. மேலும் ஆடுகளத்தின் தன்மை குறித்து அறிவதற்காக லாகூர் மற்றும் கராச்சி மைதானங்களில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.

ஆனால் ஐசிசி தொடர் நடைபெறும் மைதானங்களை சுமார் மூன்று வாரத்திற்கு முன்பே ஐசிசி இடம் வழங்கி விட வேண்டும். இதன் மூலம் பிட்ச் மற்றும் மைதானத்தின் விளம்பர பலகை பொருத்தும் பணியை ஐசிசி செய்யும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தாங்கள் மைதானத்தை பிப்ரவரி 16ஆம் தேதி வழங்குகிறோம் என்றும் இதற்காக ஸ்பெஷல் அனுமதியை ஐசிசி வழங்க வேண்டும் என்று கூறி இருந்தது.

இதனை ஐசிசி தலைவர் ஜெய்ஷா மறுத்துவிட்டு போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் நினைக்காத வகையில் ஜெய்ஷா தற்போது பெரிய மனசு காட்டிருக்கிறார். அதில், பாகிஸ்தானுக்கு சிறப்பு அனுமதி வழங்கி ஐசிசி இடம் மைதானங்களை ஒப்படைக்கும் கெடுவை நீட்டி இருக்கிறார்.

முத்தரப்புத் தொடர் நடைபெறும் போது ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது. ஆடுகளத்தில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து கண்காணிக்க ஐசிசி நிர்வாகிகளும் முடிவு எடுத்து இருக்கிறார்கள். இதேபோன்று துபாய் மைதானத்தில் ஐஎல்டி 20 தொடர் நடைபெற்று வருவதால் அந்த மைதானமும் ஐசிசிக்கு வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கும் ஜெய்ஷா சிறப்பு அனுமதி அளித்திருக்கிறார்.

Story first published: Tuesday, February 4, 2025, 7:01 [IST]
Other articles published on Feb 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+