மும்பை : சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வாகி இருக்கிறார்கள்.
எனினும் முஹமது சிராஜ் இந்த தொடரில் இடம் பெறவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், ரோகித் சர்மா, கில் இருக்கும் போது பலரும் ஜெய்ஸ்வால் எதற்கு அணியில் இருக்கிறார் என்று கேட்கிறார்கள்.

ஆனால் ஜெய்ஸ்வால் கடந்த 18 மாதங்களாக இந்திய அணியின் ஸ்டார் வீரராக இருக்கிறார்.அதிக அளவு ரன்கள் சேர்க்கிறாரர்.
இதனால் ஜெய்ஸ்வால் கண்டிப்பாக அணியில் இடம் பெறுவது அவசியம். என்னை கேட்டால் ரோஹித் சர்மாவும் ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். இதன் மூலம் இடதுகை,வலதுகை பேட்ஸ்மேன்கள் இடம்பெறுவார்கள்.
கில் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும் விராட் கோலி நான்காவது வீரராகவும், ஐந்தாவது இடத்தில் கே.எல். ராகுல் அல்லது பண்ட் இருவரின் ஒருவர் மட்டும் விளையாட வேண்டும் என அஸ்வின் குறிப்பிட்டிருக்கிறார். ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியாவும், ஏழாவது இடத்தில் அக்சர் அல்லது ஜடேஜா என இருவரில் ஏதேனும் ஒருவர் விளையாட வேண்டும் என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
எட்டாவது வீரராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை சேர்க்க வேண்டும் என்று அஸ்வின் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாகும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.அதேபோன்று மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆர்ஸ்தீப் சிங், முகமது சமி மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற வேண்டும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.
இதேபோன்று முகமது சிராஜ் அணியில் இல்லாதது தமக்கு பல கேள்விகளை எழுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அஸ்வின், ஒருநாள் கிரிக்கெட்டில் பிரமாதமான வீரர் என்றும் அவர் சமீபத காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி விளையாடினார் என்பதை பார்த்து ஒரு நாள் கிரிக்கெட் தொடர்பாக முடிவு எடுக்க வேண்டாம் என்றும் அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளார்.
கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது அஸ்வின் ஆதரித்ததை எதிர்த்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அஸ்வின், எனக்கு கில் என்ன மாமனா மச்சானா அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் பல ரெகார்டுகளை வைத்திருக்கிறார். நன்றாக விளையாட கூடியவர் எனவே இது சரியான முடிவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.