இப்ப என்ன.. தோத்துட்டோம்.. அவ்வளவுதானே.. செத்தா போயிட்டோம்.. கோஹ்லி சீற்றம்
லண்டன்: இலங்கையுடன் ஒரு போட்டியில் தோற்று விட்டோம். அவ்வளவுதான். இதை வாழ்க்கையின் முடிவு போல பார்க்கக் கூடாது என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
இலங்கையுடன் நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா நன்றாக பேட் செய்தும், பந்து வீச்சில் சொதப்பியதால் பரிதாபமாக தோல்வியுள்ளது. நல்ல ஸ்கோர் எடுத்தும் கூட இந்தியா தோற்றது ரசிகர்களை சோர்வடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் இத்தோல்வியை மிகப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார். போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார் கோஹ்லி.

மறக்க முயற்சி பண்ணுங்க
நிச்சயம் இது மோசமான நாள்தான். ஆனால் வாழ்க்கையின் முடிவு அல்ல. நாம் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கிறோம். அடுத்து நடக்க வேண்டியது பற்றி மட்டுமே நாம் கவலைப்பட வேண்டும்.

பந்து வீச்சாளர்கள் மீது தவறில்லை
பந்து வீச்சாளர்களைக் குறை சொல்வதில் பலன் இல்லை. அவர்களை விட்டு விடுங்கள். வருகிற தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி குறித்து மட்டுமே இப்போது நாம் போகஸ் செய்ய வேண்டும்.

அடுத்த வேலையைப் பார்ப்போம்
அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். வாழ்க்கை நகர்ந்தாக வேண்டும். இதிலேயே இருக்க முடியாது. மோசமான நாளை மறப்போம். அடுத்த போட்டியில் வெல்வது குறித்து சிந்திப்போம்.

இதில் பெரிய திட்டமிடல் முடியாது
டெஸ்ட் போட்டிகளில் நமக்கு நிறைய அவகாசம் இருக்கும். ஆனால் ஒரு நாள் போட்டிகளில் அதற்கு கால அவகாசம் கிடைக்காது. விரைவாக எல்லாவற்றையும் செய்தாக வேண்டும்.

நல்ல கிரிக்கெட் விளையாடுவோம்
நாம் முடிந்தவரை நல்ல கிரிக்கெட்டைக் கொடுப்போம். அது சில நேரங்களில் நடக்காமல் போகும்போது அதற்காக உடைந்து போவது சரியாக இருக்காது. அடுத்த போட்டியை நல்ல மனோபாவத்துடன் நாம் சந்திக்க வேண்டியுள்ளது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications