Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இருந்தாலும் வங்கதேசம் இப்படி செஞ்சிருக்கப்படாது.. பாவம் நியூசிலாந்து!

கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை விட்டு நியூசிலாந்தை வெளியேற்றி விட்டது வங்கதேசம். வங்கதேச அணியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது மாறியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் முக்கிய கட்டத்திற்கான இடத்தை வங்கதேசம் உயிர்ப்பித்துள்ளது. நேற்று கார்டிப் நகரில் நடந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியைப் பெற்றது வங்கதேசம்.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து 265 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. வங்கதேச அணியின் சிறப்பான பந்து வீச்சு நியூசிலாந்தை முடக்கி விட்டது. அடுத்து சேசிங்கைத் தொடர்ந்த வங்கதேசம் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எளிதாக தொட்டது.

என்ன காமெடி என்றால் வங்கதேச டாப் ஆர்டர் நேற்று தோல்வியைத் தழுவியது. ஆனால் பின் வரிசையில் வந்த ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், மகமதுல்லா ரியாத் ஆகியோர் இணைந்து 224 ரன்களைக் குவித்து நியூசிலாந்தை கலங்கடித்து விட்டனர்.

மொசாடெக் ஹூசேன்

மொசாடெக் ஹூசேன்

வங்கதேச பந்து வீச்சாளர்களில் மொசாடெக் ஹூசேன்தான் அசத்தினார். தான் வீசிய 3 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.

பதிலடி கொடுத்த செளதீ

பதிலடி கொடுத்த செளதீ

பதிலுக்கு நியூசிலாந்து பந்து வீச்சாளர் டிம் செளதீ பதிலடி கொடுத்தார். வங்கதேச டாப் ஆர்டரை இவர்தான் சீர்குலைத்தார். 33 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசம் தனது முதல் 3 விக்கெட்களையும் பறி கொடுத்தது. செளதீ அவற்றை வீழ்த்தினார்.

கை கொடுத்த ஷாகிப் அல் ஹசன்- ரியாத்

கை கொடுத்த ஷாகிப் அல் ஹசன்- ரியாத்

4 விக்கெட்களை இழந்து வெறும் 33 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஹசனும், ரியாத்தும் ஜோடி சேர்ந்து கலக்கினர். இருவரும் அதிரடியாக ஆடி 5 விக்கெட்டுக்கு 224 ரன்களைச் சேர்த்து வங்கதேசத்தின் வெற்றிக்கு வித்திட்டனர்.

ஹசன் சதம்

ஹசன் சதம்

ஷாகிப் அல் ஹசன் 115 பந்துகளில் 114 ரன்களைக் கொளுத்தினார். மறுபக்கம் மகமதுல்லா ஆட்டமிழக்காமல் 102 ரன்களைக் குவித்தார்.

அடுத்த வாய்ப்பு உறுதி

அடுத்த வாய்ப்பு உறுதி

இந்த தோல்வியால் நியூசிலாந்து தொடரை விட்டு வெளியேறி விட்டது. அடுத்த முக்கிய கட்டத்துக்கு நகர்வதற்கான வாய்ப்பை வங்கதேசம் உயிருடன் வைத்துள்ளது.

Story first published: Saturday, June 10, 2017, 8:34 [IST]
Other articles published on Jun 10, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+