சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தானில் இந்த தொடர் நடைபெறுகிறது. ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை தற்போது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் அறிவித்திருக்கிறார்.

இதில் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாகவும் ,கில் இந்திய அணியில் துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். சஞ்சு சாம்சன், டி20 போட்டிகளில் அதிரடி ஃபார்மில் இருந்து வருகிறார். இதனால் சஞ்சு சாம்சனை இந்திய அணியும் சேர்க்க தேர்வு குழு முடிவு எடுத்திருந்தது.
ஆனால் சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை என்ற காரணத்தால் சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இதேபோன்று மற்றொரு இந்திய வீரரான முஹமது சிராஜுன் இந்திய அணியில் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
முகமது சமி உள்ளிட்ட வீரர்கள் வேகப்பந்து வீச்சு படைக்க தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதேபோன்று ரிசர்வ் வீரராக ஹர்ஷித் ராணா இடம்பெற்றுள்ள நிலையில் சிராஜிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பந்து பழையதாக மாறும்போது சிராஜ் பெரிய அளவில் சோபிக்க வில்லை.
சிராஜ் போட்டியில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. என்று கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சிராஜ் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்த நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
குறைந்தபட்சம் ரிசர்வ் வீரர் ஆவது சிராஜ் இருந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அரசியல் என்றும் ரசிகர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.