Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கும், விராத் கோஹ்லிக்கும் சண்டையா...?

லண்டன்: அட்டகாசமான பந்து வீச்சாளரான ஆர். அஸ்வினை விட்டு விட்டு ரவீந்திர ஜடேஜாவை கேப்டன் விராத் கோஹ்லி தேர்வு செய்தது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இருவருக்கும் இடையே ஏதேனும் பூசலா என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் அதெல்லாம் இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் கோஹ்லி.

இந்த ஆண்டு அருமையான டெஸ்ட் சீசனாக அஸ்வினுக்கு அமைந்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இடம் பெறாதது நிச்சயம் அவரை விட எனக்குத்தான் அதிக வருத்தம். ஆனால் அணியின் தேவை, கட்டமைப்பு குறித்து அவர் புரிந்து கொண்டிருப்பது எனக்கு ஆறுதல் அளிக்கிறது என்று கோஹ்லி கூறியுளளார்.

உண்மையில் நமது முக்கிய பந்து வீச்சாளரை விட்டு விட்டு அடுத்த கட்ட பவுலரை அணியில் சேர்ப்பது என்பது கடினமானதல்ல. காரணம், இது ஒரு நாள் போட்டி. போட்டி நடைபெறும் சூழலையும் நாம் பார்க்க வேண்டும் என்றும் கோஹ்லி கூறினார்.

டாப் கிளாஸ் பவுலர்

டாப் கிளாஸ் பவுலர்

அஸ்வின் டாப் கிளாஸ் பவுலர். அனைவருக்கும் இது தெரியும். தொழில்முறை பந்து வீச்சாளரும் கூட. அணியின் தேவை, கட்டமைப்பு அவருக்குத் தெரியும். இதனால்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெறவில்லை.

நான இருக்கேன்

நான இருக்கேன்

என்னிடம் அவர், எப்போது தேவையோ அப்போது நான் நிச்சயம் களம் இறங்குவேன் என்று அஸ்வின் உறுதியளித்துள்ளார். தான் கடைசிப் போட்டியில் இடம் பெறாமல் போனது குறித்து அவருக்கு வருத்தம் இல்லை. எனக்கும் அவருக்கும் இடையே மோதலும் இல்லை. அதுதான் நாங்கள.

டெக்னிக்கல் மோதல் உண்டு

டெக்னிக்கல் மோதல் உண்டு

டெக்னிக்கல் விஷயங்களில் எனக்கும், அவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. பவுலிங்கைத் திட்டமிடுவதில் இருவரும் வாதிட்டுக் கொள்வோம். அவரிடம் அட்டகாசமான திட்டங்கள் இருக்கும். அதுதான் கடைசியில் நடைபெறும். ஆனால் தேர்வு சமாச்சாரங்களில் இருந்ததே இல்லை.

கஷ்ட காலம்

கஷ்ட காலம்

கேப்டனாக சில முடிவுகளை எடுப்பது என்பது கடினமாக இருக்கும். குறிப்பாக டோணிக்குப் பதில் பாண்ட்யாவை முன்கூட்டியே பேட் செய்ய பணித்தது. இருப்பினும் அணியின் நலன் கருதியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறது என்றார் கோஹ்லி.

Story first published: Thursday, June 8, 2017, 11:27 [IST]
Other articles published on Jun 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+