Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சோக்கர்ஸ்னா நாங்கதான்" நிரூபித்து காட்டிய தென்னாப்பிரிக்கா.. தோல்விக்கு காரணம் என்ன?

துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடிய கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் சதம் விளாசி சம்பவம் செய்தனர்.

Champions Trophy 2025 NZ vs SA Kane williamson

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. 161 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி, கண் மூடி திறப்பதற்கு 218 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது.

இருந்தாலும் தனியாளாக போராடிய டேவிட் மில்லர் 67 பந்துகளில் சதம் விளாசி மானம் காத்துள்ளார். இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி சுற்றுடன் தென்னாப்பிரிக்கா அணி வெளியேறி இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே தென்னாப்பிரிக்கா அணி இதுவரை ஒரு ஐசிசி தொடரை கூட வெல்லவில்லை.

கடந்த ஆண்டு வரை இறுதிப்போட்டிக்கு கூட வந்ததில்லை. ஒருவழியாக 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டும் இறுதிப்போட்டிக்கு வந்து இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வழக்கம் போல் அரையிறுதி போட்டியிலேயே சோக்கர்ஸ் போல் விளையாடி மீண்டும் சோக்கர்ஸ் என்பதை நிரூபித்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் தோல்விக்கு அந்த அணியின் பவுலர்கள் ஒரு காரணமாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் ஒரேயொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருந்தால் கூட வெற்றியை அடைந்திருக்க முடியும்.

ஏனென்றால் லாகூர் மைதானமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஒன்றுதான். தார் ரோடு பிட்சில் 400 ரன்களை கூட எளிதாக சேஸ் செய்ய முடியும். ஆனால் முதல் 35 ஓவர்களில் அதிகமாக விக்கெட்டுகளை விட்டுவிடாமல் பேட்டிங் ஆட வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி செய்த தவறு, ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய முயன்று தோல்வியடைந்ததுதான் என்று விமர்சிக்கப்படுகிறது.

Story first published: Wednesday, March 5, 2025, 22:52 [IST]
Other articles published on Mar 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+