Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியில் வெள்ளி வென்ற இந்தியா.. வீரர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு- மோடி வாழ்த்து

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபலமான ஹாக்கி போட்டிகளில் சாம்பியன்ஸ் கோப்பையும் ஒன்று. லண்டனில் கடந்த 10-ந் தேதி தொடங்கிய இப்போட்டியில், 6 முன்னணி அணிகள் பங்கேற்ன. 36 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிச்சுற்று லண்டனில் நேற்று நடைபெற்றது.

Champions Trophy: PM Narendra Modi congratulates 'brilliant' Indian hockey team

இந்தியா-ஆஸ்திரேலியா

இதில் 13 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை இந்திய ஹாக்கி அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி தங்க பதக்கத்தை வென்றது. இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது. முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் பியேலாவுக்கு இரண்டாவது முறையாக கோல் அடிக்க வாய்ப்பு வழங்கியதற்கு இந்திய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக முடிவை அறிவிப்பதில் ஒரு மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டது.

இந்தியா சாதனை

1978-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி 1982-ல் நடைபெற்ற தொடரில் மட்டுமே வெண்கலம் வென்றுள்ளது. இந்த முறை இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.

ரூ.2 லட்சம் பரிசுத் தொகை

இதனையடுத்து இந்திய ஹாக்கி சங்கத்தின் தலைவர் நரேந்தர் பாத்ரா, பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் உடனடியாக இந்திய வீரர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்தார். தலைமை பயிற்சியாளர் மற்றும் அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகை எனவும், மற்ற ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. மேலும், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணியும் தான் வெற்றிபெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

டுவிட்டரில் வாழ்த்திய பிரதமர் மோடி

இந்த வெற்றியை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் உற்றாகமாக விளையாடிய நமது அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய அணியின் முயற்சி அற்புதமானது. இந்திய ஹாக்கி அணியினால் பெருமையாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, June 18, 2016, 17:58 [IST]
Other articles published on Jun 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+