டிவில்லியர்ஸின் சாதனையை நொறுக்கி அள்ளிப் போட கோஹ்லிக்கு ஒரு குட்டி சான்ஸ்!
பெர்த்: தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏப் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவில் படைத்துள்ள ஒரு சாதனையை முறியடிக்க இந்திய வீரர் விராத் கோஹ்லிக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது.
இது ஒரு பேட்டிங் சாதனையாகும். தற்போது ஆஸ்திரேலியா போயுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகளில் மோதவுள்ளது. எனவே கோஹ்லிக்கு இந்த சாதனையை முறியடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வாகா மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

அது என்ன சாதனை?
அதி விரைவாக 7000 ரன்களைக் குவித்த சாதனை தற்போது வில்லியர்ஸ் வசம் உள்ளது. அதை முறியடிக்கும் வாய்ப்பு தற்போது கோஹ்லிக்கு வந்துள்ளது.

166 இன்னிங்ஸ்களில்
166 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார் வில்லியர்ஸ். கோஹ்லி இதுவரை 158 இன்னிங்ஸ்களில் 6831 ரன்களைக் குவித்துள்ளார்.

பெர்த்தில் சாதனை படைத்த டிவில்லியர்ஸ்
டிவில்லியர்ஸ் தனது சாதனையை இதே பெர்த் மைதானத்தில்தான் கடந்த 2014ம் ஆண்டு படைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஆஸி தொடரில் படைப்பாரா?
தற்போது டிவில்லியர்ஸின் சாதனையை கோஹ்லி முறியடிக்க அவருக்கு 169 ரன்களே தேவைப்படுகிறது. அவரது கையில் தற்போது 5 போட்டிகள் உள்ளன. இதனால் எளிதாக இதை சாதிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

பங்காளிகள்.. பகையாளிகள்
டிவில்லியர்ஸ், கோஹ்லி கேப்டனாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியின் முக்கிய வீரர் என்பது நினைவிருக்கலாம்

7000 ரன்கள் கிளப்
அதி வேகமாக 7000 ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தற்போது டிவில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடங்களில் கங்குலி, பிரையன் லாரா, ஹெய்ன்ஸ், கல்லிஸ் ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications