மே. இந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை அணிக்கு மலிங்கா கேப்டன்
மிர்பூர்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுடன் அரை இறுதியில் இன்று மோதும் இலங்கை அணிக்கு லசித் மலிங்கா கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
வங்கதேசத்தில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய அரை இறுதிப் போட்டி, மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் இடையே நடைபெறுகின்றன.

இலங்கை அணியின் கேப்டன் சந்திமால் இன்றைய போட்டியில் விளையாடாத காரணத்தால் கேப்டனாக லசித் மலிங்கா இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் சந்திமால் விளையாட தடை விதிக்கப்பட்டது. அந்த போட்டியில் மலிங்க கேப்டனாக இருந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Thursday, April 3, 2014, 16:40 [IST]
Other articles published on Apr 3, 2014


Click it and Unblock the Notifications