Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பகீர் கிளப்பும் டிஎன்பிஎல் சூதாட்ட புகார்.. வி.பி சந்திரசேகர் மரணத்தின் பின்னணி என்ன? அதிர்ச்சி!

Recommended Video

TNPL match fixing scandal under BCCI investigation says reports

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரில் ஊழல் நடந்து இருக்கலாம் என்று வெளியாகி வரும் செய்திகளுக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) போட்டியில் தற்போது பெரிய சர்ச்சை நிலவி வருகிறது. இந்த தொடரில் சூதாட்டம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அமைப்பு ஊழல் தடுப்பு பிரிவு சந்தேகம் அடைந்துள்ளது.

இந்த தொடரில் தங்களை சில சூதாட்டக்காரர்கள் அணுகியதாக வீரர்கள் புகார் அளித்துள்ளனர். வாட்ஸ் ஆப் மூலம் தங்களுக்கு சூதாட்டக்காரர்கள் தொல்லை கொடுத்தனர் என்று வீரர்கள் சிலர் புகார் கொடுத்துள்ளனர்.

என்ன புகார்

என்ன புகார்

அதன்படி தங்களிடம் சூதாட்டம் செய்யும்படி சூதாட்டக்காரர்கள் அணுகினார்கள். ஒரு பயிற்சியாளருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்று வீரர்கள் கூறி உள்ளனர். மூன்று வீரர்கள் இது தொடர்பாக வெளிப்படையாக புகார் அளித்துள்ளனர். அதேபோல் போட்டியின் போது நேரடியாக சிலர் அணுகியதாகவும் கூறியுள்ளனர்.

என்ன விசாரணை

என்ன விசாரணை

பிசிசிஐ அமைப்பு இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளது. ஆனால் இந்த வீரர்கள் மீது எந்த விசாரணையும் கிடையாது. மாறாக வீரர்கள் யார் மீது புகார் கொடுத்தார்களோ அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் பலர் சிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன தொடர்பு

என்ன தொடர்பு

இந்த நிலையில் இதற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விபி சந்திரசேகர் மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவரும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான விபி சந்திரசேகர் சில வாரங்கள் முன்பு காலமானார். கிரிக்கெட் தொடர்களுக்கு இவர் கடந்த சில மாதங்களாக வர்ணனை செய்து கொண்டு இருந்தார்.

யார் இவர்

யார் இவர்

தமிழக கிரிக்கெட் உலகில் இவர் பெரிதும் அறியப்பட்டவர். விபி சந்திரசேகர் உலக அளவிலும் கிரிக்கெட் உலகில் நிறைய நண்பர்களை கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1988 முதல் 1990வரை இவர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதன்பின் தமிழக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

மாரடைப்பு

மாரடைப்பு

இவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்ததாக செய்திகள் வந்தது. அதே சமயம் இவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வந்தது. மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டு மாடியில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்தது. ஆனால் இவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று அப்போது தெரியவில்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நிலையில் இப்போது, இந்த தற்கொலைக்கு பின் இந்த சூதாட்ட பிரச்சனையும், அதனால் ஏற்பட்ட அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம். இதற்கு பின் ஏதோ பெரிய தவறு நிகழ்ந்து உள்ளது என்று பிசிசிஐ அதிகாரிகள் கூறுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர்.

Story first published: Tuesday, September 17, 2019, 14:25 [IST]
Other articles published on Sep 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+