Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஹெவி ரோலர்" அஸ்திரம்.. சென்னையை வைத்து இந்திய அணியை விரட்டும் இங்கிலாந்து.. அம்பலமான பெரிய பிளான்

சென்னை: இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து அணி பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடி உள்ளது. இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இரண்டு நாள் முழுக்க இங்கிலாந்து அணி சென்னையில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில் மூன்றாவது நாளான இன்று சென்னையில் இந்திய அணி முதலாவது இன்னிங்சில் பேட்டிங் இறங்கி உள்ளது.

எப்படி

எப்படி

நேற்று முதல்நாள் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. பர்ன்ஸ் 34, சிப்லி 87, ஜோ ரூட் 218, ஸ்டோக்ஸ் 83, பட்லர் 33 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளனர்.

ஆல் அவுட்

ஆல் அவுட்

இங்கிலாந்து அணி நேற்று மாலையே 8 விக்கெட்டிற்கு 555 ரன்கள் எடுத்து இருந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி நேற்று டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அதிரடியாக ஆடி இன்றும் கூடுதலாக 28 ரன்கள் எடுத்தது.

ஏன்

ஏன்

இங்கிலாந்து அணி நேற்று டிக்ளேர் செய்யாமல் போனதற்கு என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி பிட்ச் இன்னும் வறண்டு போக வேண்டும் என்று காத்து இருக்கிறது. நேற்று மாலை பிட்ச் கொஞ்சம் பவுலிங் செய்ய வசதியாக இருந்தது. நேற்று இரவு முழுக்க பிட்ச் இன்னும் காய்ந்து இருக்கும்.

 பவுலிங்

பவுலிங்

இதனால் இன்று பிட்ச் முழுக்க முழுக்க பவுலிங் செய்ய எதுவாக இருக்கும் என்று இங்கிலாந்து கணித்துள்ளது. இதன் காரணமாகவே இன்று வரை இங்கிலாந்து பேட்டி இழுத்தது. இதில் இன்னொரு தந்திரம் உள்ளது. இன்று காலை இங்கிலாந்து பேட்டிங் இறங்கும் முன் பிட்சில் ஹெவி ரோலர் போட்டு உருட்டப்பட்டது. ஹெவி ரோலர் வேண்டும் என்று இங்கிலாந்து கேப்டன் சொன்னதால் அதை வைத்து பிட்ச் செட் செய்யப்பட்டது.

கேப்டன்

கேப்டன்

பேட்டிங் அணியின் கேப்டன் எந்த ரோலரை பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடியும். இதனால் இந்த ரோலர் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பிட்ச் நன்றாக செட்டாகும். இது இங்கிலாந்து பவுலிங் செய்யும் போது அவர்களுக்கு சாதகமாக மாறும். இதனால்தான் ஹெவி ரோலர் போட்ட பின் வரிசையாக இங்கிலாந்து வீரர்கள் அவுட்டானார்கள்.

அவுட்

அவுட்

அதன்பின் களமிறங்கிய ரோஹித் சர்மாவும் 6 ரன்களுக்கு அவுட் ஆனார். ஹெவி ரோலர் மூலம் பிட்ச் உருட்டப்பட்ட காரணத்தாலும், 3 நாட்கள் ஆட்டம் நடப்பதாலும் பிட்ச் மொத்தமாக பவுலிங் செய்ய சாதகமாக மாறியுள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு சென்னை பிட்ச் எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. இந்திய அணி கவனமாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Story first published: Sunday, February 7, 2021, 11:20 [IST]
Other articles published on Feb 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+