Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்ட திட்டமெல்லாம் காலி.. திடீரென வெளியேறிய கே.எல் ராகுல்.. இந்திய பிளேயிங் 11ல் எதிர்பாராத மாற்றம்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே. எல் ராகுல் காயம் காரணமாக வெளியேறி உள்ள நிலையில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

இதற்கு பதிலடியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடி வெற்றியை ருசித்தது. இந்த நிலையில் வரும் 7ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

எப்படி

எப்படி

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே. எல் ராகுல் காயம் காரணமாக வெளியேறி உள்ளார். இவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ராகுல் வெளியேறி உள்ளார்.

அணி

அணி

இந்திய அணியில் அடுத்த போட்டியில் இவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலும் இந்திய அணியில் இவர் ஓப்பனிங் வீரராக களமிறங்குவார் என்று கூறப்பட்டது. ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் ஆடுவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இவர் தற்போது தொடரில் இருந்தே வெளியேறி உள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள். கே. எல் ராகுல் அணியில் இல்லாததால் ரோஹித் சர்மாதான் இந்திய அணியில் ஓப்பனிங் இறங்குவார் என்று கூறுகிறார்கள். அதேபோல் அணியில் ஹனுமா விஹாரி தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அணி

அணி

அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, ஜடேஜா, பண்ட், விஹாரி, பும்ரா, சிராஜ், அஸ்வின், நடராஜன் (அல்லது) ஷரத்துல் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று கருதப்படுகிறது.

Story first published: Tuesday, January 5, 2021, 10:46 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+