பாகிஸ்தானை வெல்ல முழு படை பரிவாரங்களுடன் இறங்குமா இந்திய அணி?
Recommended Video

இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி.. இந்தியா ஜெயிக்குமா? இல்லையா?
துபாய் : இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தான் அணியை ஆசிய கோப்பை போட்டியில் இன்று சந்திக்கிறது.
நேற்றைய ஹாங்காங் அணிக்கெதிரான போட்டியில்,இங்கிலாந்து தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் களமிறங்கவில்லை. அந்த போட்டியில் இந்தியா தட்டுத் தடுமாறி 26 ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் பின்வரும் மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.
1 ஷர்டுல் தாக்குருக்கு பதிலாக பும்ரா
இந்திய அணியின் நட்சத்திர வேகபந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா இன்றைய போட்டியில் களமிறக்கப்படவேண்டும். ஹாங்காங் அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடாத ஷர்டுல் தாக்குருக்கு பதிலாக பும்ரா அணியில் களமிறங்க வேண்டும். நேற்றைய போட்டியில் தாக்குர் 4 ஓவர்களில் 41 ரன்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
2 தினேஷ் கார்த்திக்கு பதிலாக ராகுல்
இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர்களில் ஒருவரான கே எல் ராகுல் மூன்றாம் நிலையில் களமிறக்கப்படவேண்டும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ராகுலை களமிறக்கலாம். தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடினாலும் கூட டாப் ஆர்டர் பேட்டிங்கில் கோஹ்லி இல்லாத காரணத்தினால் ராகுல் மூன்றாம் நிலையில் இறங்க வேண்டியது அவசியமாகும்.
3 மூன்றாவது வேகபந்துவீச்சாளராக பாண்டியா
இந்திய அணியின் ஆல் ரௌண்டர் ஹார்டிக் பாண்டியா அணியில் மூன்றாவது வேகபந்துவீச்சாளராக களமிறக்கப்பட வேண்டும். பும்ரா , புவனேஸ்வர்குமார் அல்லது கலீல் அஹமத் ஆகியோருடன் பாண்டியா மூன்றாவது வேகபந்துவீச்சாளராக களமிறக்கலாம்.
4 துருப்புசீட்டு கேதார் ஜாதவ்
இந்திய அணியின் கேதார் ஜாதவ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன்களை குவிப்பதில் வல்லவர். மேலும் பகுதி நேர சுழல்பந்துவீச்சிலும் அணிக்கு கை கொடுப்பவர். எனவே அவர் இந்த போட்டியில் இடம்பெற வேண்டும்.
5 நான்காம் நிலையில் தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி நான்காம் நிலையில் களமிறக்கபடவேண்டும். ஏனென்றால் நடுவரிசை பேட்டிங்கில் நிலைத்து ஆடி ரன்களை குவிக்கவேண்டும்..அவருக்கு அடுத்த இடத்தில் ராயுடு,கேதார் ஜாதவ் மற்றும் பாண்டியா ஆகியோரை களமிறக்கலாம்.
6 இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள்,2 ஆல் ரவுண்டர்கள் மற்றும் நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்திய உத்தேச அணி விவரம்
ரோஹித் சர்மா, தவான்,ராகுல்,தோனி, அம்பட்டி ராயுடு,கேதார் ஜாதவ்,ஹார்டிக் பாண்டியா,சஹால்,குல்தீப் யாதவ்,பும்ரா,புவனேஸ்வர் குமார்/கலீல் அஹமத்
Story first published: Wednesday, September 19, 2018, 12:08 [IST]
Other articles published on Sep 19, 2018


Click it and Unblock the Notifications