Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி க்ளவுசைவிட, லியாண்டர் பயஸ் டென்னிஸ் ராக்கெட்டுக்கு ஏலத்தில் மதிப்பு அதிகம்!

கொல்கத்தா: புற்றுநோயாளியின் சிகிச்சை செலவுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில், கிரிக்கெட் கேப்டன் டோணியின் கையுறை மற்றும் கால் காப்பு (லெக் பேட்) ரூ.1 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசின் ராக்கெட் ரூ.1.5 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

மோகன் பகான் கால்பந்தாட்ட தொடரின் தீவிர ரசிகரான, மேற்கு வங்கத்தை சேர்ந்த பபி மஜ்ஹி, ஈரல் புற்றுநோயால் உயிருக்கு போராடி வருகிறார். அவரது மருத்துவ செலவுக்காக, நிதி திரட்டும் நோக்கத்தில், விளையாட்டு செய்தி இணையதளம் ஒன்று வீரர்களின் விளையாட்டு உபகரணங்களை ஏலம் விட்டது.

Charity: MS Dhoni's wicketkeeping gloves, pads fetch Rs 1 lakh at auction

டோணியின், விக்கெட் கீப்பர் கிளவுஸ் மற்றும் கால் காப்பு ரூ.1 லட்சத்திற்கும், லியாண்டர் பயஸ் விம்பிள்டன் கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றபோது பயன்படுத்திய ராக்கெட் ரூ.1.5 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டது. லியாண்டர் பயஸ் ராக்கெட்டை ஏலம் எடுத்தது மேற்கு வங்க கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏலத்தில் கிரிக்கெட் வீரர் அஜிங்ய ரஹானே, இந்திய கால்பந்தாட்ட அணி தலைவர் சுனில் சேட்ரி ஆகியோரது ஆடைகளும் ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் வசூலான ரூ.14 லட்சத்தை சிகிச்சை செலவுக்கு அந்த வெப்சைட் வழங்க உள்ளது.

Story first published: Monday, June 13, 2016, 17:39 [IST]
Other articles published on Jun 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+