Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் அனுப்பிய மெசேஜ்.. உடனடியாக ஷாக் கொடுத்த புஜாரா.. ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ச்சி.. என்ன நடந்தது?

இந்தூர்: 3வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா திட்டத்தை மாற்றிய அடுத்த நிமிடமே, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு புஜாரா பயம் காட்டிய நிகழ்வு இணையத்தை கலக்கி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 186 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என வலுவாக இருந்த போதும், இறுதி நேரத்தில் விக்கெட்களை பறிகொடுத்தது. இதனால் 197 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

தடுமாறிய இந்தியா

தடுமாறிய இந்தியா

88 ரன்கள் பின் தங்கிய சூழலில் களமிறங்கிய இந்திய அணி 2வது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் தடுமாறியது. ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா 12 ரன்களுக்கும், சுப்மன் கில் 5 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த விராட் கோலி 13, ரவீந்திர ஜடேஜா 7, ஸ்ரேயாஸ் ஐயர் 26, கே.எஸ்.பரத் 3 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியதால் இந்திய அணி சரிவில் சிக்கியது.

 புஜாராவின் இன்னிங்ஸ்

புஜாராவின் இன்னிங்ஸ்

தனி ஆளாக நின்று போராடிய சட்டீஸ்வர் புஜாரா மட்டும் 142 பந்துகளில் 59 ரன்களை அடித்து இந்திய அணியை மீட்டார். இந்நிலையில் புஜாரா - அக்‌ஷர் பட்டேல் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்துக்கொண்டிருந்த போது ரோகித் சர்மா செய்த விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதாவது விக்கெட்கள் இல்லாததால் புஜாராவும் - அக்‌ஷர் பட்டேலும் மிகவும் நிதானமாக ஸ்டோக் வைத்துக்கொண்டே ரன் உயர்த்தினர்.

பெரும் அழுத்தம்

பெரும் அழுத்தம்

அவர்களை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அனைத்து ஃபீல்டர்களையும் அருகில் நிற்க வைத்திருந்தார். இதனால் நீண்ட நேரம் அழுத்தம் இருந்தது. இதனை பார்த்து ஆவேசப்பட்ட ரோகித் சர்மா, வாட்டர் பாயாக செல்லும் இஷான் கிஷானை அழைத்து ஸ்டோக் வைத்துக்கொண்டே இருக்க வேண்டாம். மிட் ஆன் ஃபீல்டரை உள்ளே வைத்துள்ளனர். எனவே தூக்கி அங்கு சிக்ஸர் அடிக்க சொல் என வியூகத்தை கூறி அனுப்பினார்.

பின்னர் என்ன ஆனது?

பின்னர் என்ன ஆனது?

ரோகித்தின் தகவலை இஷான் கிஷானும் புஜாரா, அக்‌ஷர் ஜோடியிடம் கூறினார். புஜாரா பெரிதாக அதிரடி காட்டக்கூடியவர் இல்லை என்பதால் இது அக்‌ஷர் பட்டேலுக்கான தகவலாக தான் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த ஓவரிலேயே சட்டீஸ்வர் புஜார இறங்கி வந்து மிட் ஆன் திசையில் பெரிய சிக்ஸரை பறக்கவிட்டார். இதனை பார்த்த அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது.

மகிழ்ச்சியடைந்த ரோகித்

மகிழ்ச்சியடைந்த ரோகித்

தனது திட்டத்தை அழகாக செயல்படுத்தியதை பார்த்து மகிழ்ச்சியடைந்த கேப்டன் ரோகித் சர்மா, கொண்டாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. எனினும் புஜாராவால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. 59 ரன்கள் அடித்திருந்த போது நாதன் லியோனிடம் சிக்கி துரதிஷ்டவசமாக அவுட்டானார்.

Story first published: Thursday, March 2, 2023, 18:07 [IST]
Other articles published on Mar 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+