Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடங்குகிறது ஐபிஎல்-கலக்கத் தயாராகும் உற்சாக அழகிகள்!

Cheerleaders
வெளிநாடுகளில் பரவலாக காணப்படும் சியர் லீடர்கள் எனப்படும் உற்சாகமூட்டும் அழகிகள் என்ற கான்செப்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் நிர்வாகம்தான்.

2008ம் ஆண்டு நடந்த முதலாவது ஐபிஎல் தொடரின்போதுதான் இந்த சியர் லீடர் அழகிகளை இந்தியா கண்டு களித்தது.

ஒவ்வொரு அணிக்கும் தனித் தனி குழுவாக அழகிகளைக் களம் இறக்கினர். வீரர்கள் ஃபோர், சிக்ஸ் அடிக்கும்போது இந்த அழகிகள் எழுந்து ஆடியதை பார்த்து குஷியானார்கள் ரசிகர்கள்.

இந்த அழகிகள் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியபோது அதை அங்கீகரித்து அனுமதி அளித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

அமெரிக்காவில் கால்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் இந்த சியர் லீடர்களின் ஆதிக்கம் அதிகம், இவர்களின் ஆட்டமும் பிரபலம். தற்போது இந்தியாவிலும் இந்த சியர் லீடர்களின் புகழ் வெகுவாக பரவி பிரபலமாகி விட்டது.

இவர்கள் முழுக்க முழுக்க வெளிநாட்டினர்தான். உஸ்பெக்கிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இவர்கள் வந்து ஆடுகின்றனர். உக்ரைன், பெலாரஸ் உள்ளிட்ட முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்தவர்களும் கூட தற்போது அதிக அளவில் சியர் லீடர்களாக உள்ளனர்.

தற்போது இந்தியாவிலிருந்தும் சியல் லீடர்களைத் தேர்வு செய்ய ஆர்வம் பிறந்துள்ளது. காரணம், இந்திய அழகிகளும், நாங்கள் எந்த வகையிலும் வெளிநாட்டு அழகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று சவால் விடும் வகையில் தயாராகி விட்டதே.

வீரர்கள் மைதானத்தில் வியர்க்க விறுவிறுக்க ஆடி, ரசிகர்களைக் கவரும் அதேசமயம், ஒரு பந்தை கூட வீசாமல், சந்திக்காமல், ஆடாமல், கலக்கி ரசிகர்களை இன்ஸ்டன்ட்டாக கவர்ந்தவர்கள் இந்த அழகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 4வது போட்டித் தொடரையும் கலக்க சியர் லீடர்கள் உற்சாகமாக தயாராகி விட்டனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+