Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை - இலங்கைக்கு எதிராக முதல் ஹாட்ரிக் விக்கெட்.. சென்னை வீரர் மெய்யப்பன் அசத்தல்

ஜீலாங் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக யுஏஇ அணிக்காக விளையாடும் சென்னை வீரர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ரவுண்ட் 1 குரூப் ஏ பிரிவில் இன்று இலங்கையும், யுஏஇ அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் , பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இலங்கை வீரர்கள் விளையாடினர்.

கடும் சவால்

கடும் சவால்

தொடக்க வீரர் நிசாங்கா, அதிரடியாக விளையாடி 60 பந்துகளை எதிர்கொண்டு 74 ரன்களை விளாசினார். இதே போன்று தனஞ்செய்யா சில்வா 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இலங்கை அணி 117 ரன்களுக்கு 3 விக்கெட் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.அப்போது ஆட்டத்தின் 15வது ஓவரை யுஏஇ அணியில் விளையாடும் மெய்யப்பன் இலங்கை அணிக்கு கடும் சவாலை அளித்தார்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

முதலில் 15 ஓவரின் 4வது பந்தில் ஐபிஎல் வீரர் ராஜபக்சாவின் விக்கெட்டை மெய்யப்பன் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்தில் அசலாங்காவை டக் அவுட்டாக்கிய மெய்யப்பன், கடைசி பந்தில் இலங்கை கேப்டன் ஷனாகாவை போல்ட் ஆக்கினார். இதன் மூலம் 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஹாட்ரிக் சாதனையை மெய்யப்பன் நிகழ்த்தினார்.

5வது ஹாட்ரிக் சாதனை

5வது ஹாட்ரிக் சாதனை

இது, டி20 உலககோப்பையில் 5வது ஹாட்ரிக் சாதனையாகும். முதல் உலககோப்பையின் போது பிரட்லீ வங்கதேசத்துக்கு எதிராக நிகழ்த்தினார். அதன் பிறகு அயர்லாந்து வீரர் கேம்பர் என்ற வீரர் நெதர்லாந்துக்கு எதிராகவும், ஹசரங்கா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும், ரபாடா இங்கிலாந்துக்கு எதிராகவும் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றனர்.

யார் இந்த மெய்யப்பன்?

யார் இந்த மெய்யப்பன்?

இந்த சாதனையை டி20 உலககோப்பையில் நிகழ்த்திய முதல் தமிழக வீரர் மெய்யப்பன் ஆவார். சென்னையில் பிறந்து வளர்ந்த மெய்யப்பன், கடந்த 2012 ஆம் ஆண்டு துபாய்க்கு குடும்பத்துடன் சென்று தங்கி, அங்கு கிரிக்கெட் பயின்றுள்ளார். 2019ஆம் ஆண்டு அண்டர் 19 யுஏஇ அணியின் கேப்டனாக இருந்த மெய்யப்பன், அந்த ஆண்டிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Tuesday, October 18, 2022, 17:18 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+