Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே தோல்வி எதிராலி.. சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் அடியோடு மாற்றம்.. அடுத்த வருசம் பாருங்க!

மும்பை: இந்தியாவில் பாரம்பரிய மிக்க மைதானங்களில் ஒன்றான சென்னை சேப்பாக்கம் மைதானம் தற்போது புதிய மாற்றத்தை சந்திக்க போகிறது. சேப்பாக்கம் மைதானம் பல வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளை நடத்தி இருக்கிறது.

இந்த சேப்பாக்கம் மைதானத்தில் தான் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சேப்பாக்கம் அணியை மையமாக வைத்து தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.

Chennai Chepauk stadium outfield being renovated

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக விளங்கிய இந்த சேப்பாக்கம் மைதானம் நடந்து முடிந்த சீசனில் தகர்க்கப்பட்டது.
சென்னை அணி இங்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. கடந்த சீசனில் மட்டும் சேப்பாக்கம் அணியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.

இதுதான் சிஎஸ்கே அணி பத்தாவது இடம் பிடித்ததற்கு முக்கிய காரணமாகவும் மாறியது.
சேப்பாக்கம் மைதானம் கணிக்க முடியாதபடி இருந்ததாகவும் பவுண்டரி லைனில் ஓரம் இருந்த ஆடுகளம் வித்தியாசமாக செயல்பட்டதாகவும் வல்லுநர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனால் சேப்பாக்கம் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்று கணிக்க முடியாமல் சிஎஸ்கே நிர்வாகமும் தடுமாறியது.

இதற்கு காரணம் பவுண்டரி லைனில் ஓரத்தில் இருக்கும் சேதம் அடைந்த மைதானம் தான் என்று வல்லுநர்கள் கணித்திருந்தார்கள். இந்த சூழலில் சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் உள்ள ஆடுகளம் மற்றும் மைதானம் முழுவதும் உள்ள புள்தரைகள் முழுவதுமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகளை தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மண் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டு அதன் பிறகு அதில் நவீன தொழில்நுட்பம் கூடிய பச்சை பசேல் என இருக்கும் புற்களை வளர்க்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தை தயார் செய்ய ஏதுவாக இந்த பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதம் முடிவடையும் என தெரிகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் புனரமைக்கப்படும் நிலையில் இங்கு நடைபெற இருந்த இந்திய மகளிர் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு இடையிலான போட்டிகள் மாற்றப்பட்டு இருக்கிறது.

Story first published: Sunday, June 29, 2025, 16:12 [IST]
Other articles published on Jun 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+