
செஸ் ஒலிம்பியாட்
இந்த நிலையில், போட்டியின் விதிகளை பார்ப்பதற்கு முன், எப்படி இந்த செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது என்று பார்க்கலாம். 1924 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் செஸ் போட்டியை சேர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது, இதனை ஒலிம்பிக் சம்மேளனம் சேர்த்து கொள்ளவில்லை. இதனால், கடுப்பாகி, நீ என்ன எங்களை சேர்க்காமல் போவது, நாங்களே எங்களுக்கு ஒரு விளையாட்டை தொடங்கி கொள்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த செஸ் ஒலிம்பியாட்.

அணி விவரம்
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர் நடைபெறுகிறது. இதில் ஒலிம்பிக் போல் தினந்தோறும் எல்லாம் பதக்கம் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறாது. காரணம், வெற்றியாளர்களை தீர்மானிக்க மொத்தம் 11 சுற்றுகள் விளையாட வேண்டும். ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் மற்றும் கூடுலாக ஒரு வீரர் என மொத்தம் 5 பேர் இடம்பெறுவார்கள்.

புள்ளிகள்
இதில் உதாரணத்துக்கு இந்தியா, அமெரிக்காவை எதிர்கொள்கிறது என்று வைத்து கொள்வோம். இதில், ஒரு அணியில் உள்ள 4 பேரும், மற்ற அணிகளை சேர்ந்த 4 வீரர்களுடன் ஒரே நேரத்தில் மோதுவார்கள். இதில், வெற்றி பெற்றால் 2 புள்ளிகள், தோல்வியை தழுவினால் புள்ளிகள் கிடையாது, சமனில் முடிந்தால் 1 புள்ளிகள் வழங்கப்படும். இதில் இந்தியா முதல் சுற்றில் 3 வெற்றி, 1 டிரா பெறுகிறது என்றால், மொத்தம் 7 புள்ளிகள் கிடைக்கும்.

வெற்றியாளர்கள்
இப்படி 11 சுற்று முடிவில் எந்த அணி அதிக புள்ளிகளை பெறுகிறார்களோ அவர்களுக்கு சாம்பியன் பட்டம் கிடைக்கும். அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும். மேலும், 11 சுற்றில் 8 சுற்றில் விளையாடி அதிக புள்ளிகளை பெறும் வீரர்களுக்கும் தனி பதக்கம் வழங்கப்படும். ஓபன் பிரிவு , மகளிர் பிரிவு மற்றும் இரண்டையும் சேர்த்து கம்பைண்ட் பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் பரிசு வழங்கப்படும்.
Recommended Video

விதிமுறை
ஒரு வேளை புள்ளிகள் ஒன்றாக இருந்தால் வெற்றியாளர்களை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும். முதல் 40 நகர்த்தல் 90 நிமிடங்களில் மேற்கொள்ள வேண்டும். 40 நகர்த்தலுக்கு மேல் 30 நிமிடங்கள் வழங்கப்படும். அதில் ஒரு நகர்த்தலை 30 விநாடிகளில் மேற்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications











