ஜெயித்த இந்தியா: சென்னை ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கிரிக்கெட் பிள்ளையார்
சென்னை: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி சென்னை ரசிகர்கள் கிரிக்கெட் பிள்ளையாரிடம் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றி அருள்பாலித்த பிள்ளையார் இந்திய அணிக்கு பிரமாண்ட வெற்றியை தேடிக் கொடுத்துவிட்டார்.
இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நடப்பு உலக கோப்பை தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது தொடக்க லீக் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை தொடர்ந்து 6வது முறையாக வீழ்த்தி ஆதிக்கத்தை நிலைநாட்டியதுடன், இழந்த பார்மையும் மீட்டது.
இந்த நிலையில், இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவை இன்று எதிர்கொண்டது.

மெல்போர்ன் மோதல்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, காலை 9.00 மணிக்கு தொடங்கியது.

3 தோல்வி
உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி எப்படி இந்தியாவை கண்டால் நடுங்குகிறதோ, அதே போல தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி ஹாட்ரிக் தோல்வி கண்டுள்ளதால் (1992, 1999, 2011) இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மந்தம் - நிதானம் - அதிரடி
டாஸ் வென்ற இந்தியா அணி ஆரம்பத்தில் சற்றே மந்தமாக தொடங்கினாலும், அடுத்தடுத்த ஓவர்களில் நின்று நிதானமாக ஆடி பின்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இன்று வெல்ல வேண்மடும்
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று சென்னை புது ஆவடி சாலையில் உள்ள கிரிக்கெட் பிள்ளையார் கோவிலில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய தேசிய கொடியை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மனமுருக வேண்டுதல்
இன்றைய போட்டியில் மட்டுமல்லாது உலகக்கோப்பையையும் இந்திய அணி வெல்லவேண்டும் என்று மனமுருகி வேண்டிக்கொண்டனர்.

பிள்ளையார் அருள்
சென்னை ரசிகர்களின் வேண்டுதல் வீண் போகவில்லை. தென் ஆப்ரிக்கா அணி வீரர்களின் பந்து வீச்சினை தவிடுபொடியாக்கி 307 ரன்களை குவித்தனர் இந்திய அணி வீரர்கள். பின்னர் களமிறங்கிய தென்ஆப்ரிக்கா அணி வீரர்களை, 177 ரன்களில் வாரிச்சுருட்டி வெற்றியை பதிவு செய்தனர். இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.


Click it and Unblock the Notifications