சென்னை: இந்தியா, நியூசிலாந்து இடையிலான 5வது ஒரு நாள் போட்டிக்கான விற்பனை இன்று சென்னையில் தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிச் சென்றனர்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இந்தியாவுடன் 5 ஒரு நாள் போட்டிகளில் மோதுகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. வருகிற 7ம் தேதி நான்காவது போட்டி பெங்களூரில் நடைபெறுகிறது.
10ம் தேதி கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ரூ. 500 முதல் ரூ. 15,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை ஹெவியாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் நீண்ட வரிசையில், கொட்டும் மழையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியதால் அந்தப் பகுதியில் கிரிக்கெட் ரசிகர்கள் மயமாக காணப்பட்டது.