Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெண்டல் சப்போர்ட்.. செம வெறி.. மொத்தமாக மாறிய இந்தியா..சென்னை டெஸ்டில் இந்த டிவிஸ்டை கவனிச்சீங்களா?

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 106 ரன்கள் எடுத்துள்ளது.

ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 80 ரன்களை எடுத்துள்ளார். இன்று அவர் சதம் அடிக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 விக்கெட்

விக்கெட்

சுப்மான் கில், புஜாரா, கோலி விக்கெட்டை இந்திய அணி இழந்துவிட்டது . ஆனாலும் இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி வருகிறார்கள். முக்கியமாக ரோஹித் சர்மா கவலையே இன்றி கவனமாக ஆடி வருகிறார். இங்கிலாந்து பவுலர்களை ரோஹித் சர்மா மிகவும் அசால்ட்டாக எதிர்கொண்டு வருகிறார்.

நம்பிக்கை

நம்பிக்கை

முக்கியமாக ரோஹித் சர்மாவின் ஆட்டமே நம்பிக்கை மிகுந்த ஆட்டமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா டெஸ்டிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் ரோஹித் சர்மா ஆடிய விதத்திற்கும் இன்று ஆடும் விதத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இந்திய வீரர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து உள்ளது

காரணம் என்ன

காரணம் என்ன

மைதானத்தில் இந்திய ரசிகர்கள் வந்து இருப்பது வீரர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதிலும் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஒவ்வொரு பந்துக்கும் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார்கள். ஒவ்வொரு அடிக்கும் தமிழக மக்கள் அதிரடியாக கோஷம் எழுப்பி ஆதரவு கொடுத்தனர்.

ஆதரவு

ஆதரவு

இது தற்போது இந்திய அணி வீரர்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. மெண்டல் சப்போர்ட் என்று சொல்லும் அளவிற்கு இந்திய வீரர்களுக்கு ரசிகர்களின் வருகை பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.சென்னை டெஸ்டில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாற்றம்

மாற்றம்

பொதுவாக சென்னை ரசிகர்கள் கிரிக்கெட் அனுபவம் கொண்டவர்கள். கிரிக்கெட்டை சிறப்பாக கொண்டாட கூடியவர்கள். அந்த ரசிகர்கள் மீண்டும் மைதானத்திற்கு வந்து இருப்பது இந்திய ரசிகர்களை ஊக்குவித்துள்ளது.

Story first published: Saturday, February 13, 2021, 13:04 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+