Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை ரசிகர்களே எங்கள் பலம்... டோணி

சென்னை: சென்னை ரசிகர்கள் தான் எங்கள் பலம் எனத் தெரிவித்துள்ளார் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான டோணி.

சென்னை கரையஞ்சாவடியில் உள்ள கண் மருத்துவமனைத் திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்தார் டோணி. முன்கூட்டியே இது குறித்து தகவலறிந்த ரசிகர்கள் அங்கு குழுமியிருந்தனர். டோணி, டோணி என அவர்கள் கோஷமிட்டனர்.

மருத்துவமனையை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார் டோணி. அப்போது நகைச்சுவை கலந்த டோணியின் பேச்சை அனைவரும் ரசித்தனர்.

விழாவில் டோணி பேசியதாவது:-

அப்படிச் சொல்லவில்லை...

அப்படிச் சொல்லவில்லை...

நிறைய பேருக்கு கண் பிரச்சனை வந்து இந்த மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று நான் கூறுவதற்கில்லை.

சிறந்த சிகிச்சை...

சிறந்த சிகிச்சை...

ஆகவே இந்த மருத்துவமனை நிறைய நோயாளிகளுடன் சிறப்புற விளங்கவேண்டும் என்று என்னால் வாழ்த்த முடியாது. ஆனால் யார் இங்கு வந்தாலும் சிறந்த சிகிச்சை பெறுவார்கள் என்று கூறக்கடமைப் பட்டிருக்கிறேன்.

எனக்குப் பிடித்த சென்னை...

எனக்குப் பிடித்த சென்னை...

இந்த சீசனில் எனக்குப் பிடித்த சென்னைக்கு இது என்னுடைய முதல் வருகை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இங்கு நடைபெறவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

என் பலமும்...

என் பலமும்...

ஆனாலும் சென்னையின் எண்ணற்ற ரசிகர்களின் ஆதரவு எங்கள் பக்கம் இருந்தது. அவர்கள்தான் எங்கள் பலம்' எனப் பேச்சை முடித்த டோணி ‘சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விசில் போடு' என பார்வையாளர்கள் மத்தியில் கூறினார்.

ரோல் மாடல்...

ரோல் மாடல்...

இந்த விழாவில் டோணியுடன் வந்திருந்த என்.சீனிவாசன், ‘டோணி எல்லொருக்கும் ஒரு ரோல் மாடல் எனத் தெரிவித்தார்.

Story first published: Tuesday, June 10, 2014, 16:07 [IST]
Other articles published on Jun 10, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+