சென்னை 5i50 டிரையத்லான்.. இந்தியர்கள் ஆதிக்கம்.. தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: சென்னையில் நடைபெற்ற முதலாவது 'ஐயர்ன்மேன் 5i50 சென்னை டிரையத்லான்' போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு முத்திரை பதித்துள்ளனர். யோஸ்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பிரம்மாண்ட போட்டியானது ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த ஒலிம்பிக் தூர டிரையத்லான் போட்டியுடன், டுயோஸ்கா டூயத்லான் (DuYoska Duathlon) போட்டியும் நடைபெற்றது.
இந்த போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் திரு. சத்யபிரதா சாஹு ஐஏஎஸ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி. சினேகா டி ஐஏஎஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு. மேகநாத ரெட்டி ஐஏஎஸ் மற்றும் யோஸ்கா நிறுவனத்தின் சிஇஓ-வும், ஐயர்ன்மேன் இந்தியாவின் தலைவருமான தீபக் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
6 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச போட்டியாளர்கள் உட்பட மொத்தம் 650க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நீச்சல் போட்டி ரத்து:
கடல் அலைகளின் சீற்றம் மற்றும் நீர் நிலை காரணமாக, வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு டிரையத்லானின் முக்கிய அங்கமான 'நீச்சல்' பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக, போட்டியின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, முதலில் 5 கி.மீ ஓட்டம், அதைத் தொடர்ந்து 40 கி.மீ சைக்கிளிங் மற்றும் இறுதியாக 10 கி.மீ ஓட்டம் என வீரர்கள் தங்கள் திறனை நிரூபித்தனர்.
வெற்றியாளர்கள் விபரம்:
ஓபன் ஆண்கள் பிரிவில் ஆதர்ஷ் எம்.எஸ் 2 மணி நேரம் 05 நிமிடம் 14 வினாடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் ஆர்த்தி நயினார் 2 மணி நேரம் 55 நிமிடம் 23 வினாடிகளில் கடந்து சாம்பியன் பட்டம் வென்றார். தொடர் ஓட்டப் பிரிவில் அணி முதலிடத்தைப் பிடித்தது. பல்வேறு பிரிவுகளிலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி, இந்தியாவின் வளர்ந்து வரும் டிரையத்லான் திறமையை உலகுக்குக் காட்டினர்.
இது குறித்துப் பேசிய ஐயர்ன்மேன் இந்தியா தலைவர் தீபக் ராஜ், "இன்று கூடியுள்ள கூட்டத்தையும், முதன்முறை பங்கேற்பவர்களையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. கோவாவில் நாங்கள் நடத்தும் 'ஐயர்ன்மேன் 70.3' கிமீ போட்டிக்கு இது ஒரு சிறந்த நுழைவுவாயிலாக அமையும். அடுத்த ஆண்டும் சென்னைக்கு வர ஆவலுடன் உள்ளோம்" என்றார்.
டுயோஸ்கா டூயத்லான் (DuYoska Duathlon): இதனுடன் நடைபெற்ற 'DuYoska Duathlon' போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஸ்பிரிண்ட் டூயத்லான் பிரிவில் லோகிதாஸ் ராஜசேகரன் மற்றும் அனி வர்மா ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றனர்.
முழுமையான போட்டி முடிவுகள்:
5i50 டிரையத்லான் சென்னை (ஓபன் பிரிவு) - ஆண்கள்:
வெற்றியாளர்: ஆதர்ஷ் எம்.எஸ் - 2:05:14
இரண்டாம் இடம்: ராஜ்குமார் பவார் - 2:08:21
மூன்றாம் இடம்: குந்த்ரக்பம் இங்கம்பா மெய்தி - 2:11:08
5i50 டிரையத்லான் சென்னை (ஓபன் பிரிவு) - பெண்கள்:
வெற்றியாளர்: ஆர்த்தி நயினார் - 2:55:23
இரண்டாம் இடம்: கார்த்திகா ராஜாராம் - 2:55:57
மூன்றாம் இடம்: தீபா ராமகிருஷ்ணன் - 2:58:28
5i50 டிரையத்லான் சென்னை - ரிலே:
வெற்றியாளர்: SOL Fitness - 2:21:36
இரண்டாம் இடம்: Boss of Tri - 2:26:13
மூன்றாம் இடம்: 5121 Strivers - 2:39:47
5i50 டிரையத்லான் சென்னை (ITF) - ஆண்கள்:
வெற்றியாளர்: சருங்பாம் அதோபா மெய்தி - 2:02:31
இரண்டாம் இடம்: யஜத் கே.பி - 2:03:01
மூன்றாம் இடம்: டெல்ஹெய்பா சோரம் - 2:03:14
5i50 டிரையத்லான் சென்னை (ITF) - பெண்கள்:
வெற்றியாளர்: டாலி பாட்டீல் - 2:16:49
இரண்டாம் இடம்: மான்சி மோகித் - 2:17:45
மூன்றாம் இடம்: கீர்த்தி சக்திவேல் - 2:18:55
டுயோஸ்கா டூயத்லான் (ஸ்டாண்டர்ட்) - ஆண்கள்:
வெற்றியாளர்: சபன் பஞ்சால் - 2:06:05
இரண்டாம் இடம்: சுதீப் பி - 2:33:49
மூன்றாம் இடம்: பிரமோத் அகுலு - 2:58:25
டுயோஸ்கா டூயத்லான்(ஸ்டாண்டர்ட்) - பெண்கள்:
வெற்றியாளர்: மோகனதேவி கே - 3:19:26
இரண்டாம் இடம்: பொன் ராஜா பி - 3:27:12
மூன்றாம் இடம்: சுபாஷினி மதன் - 3:36:35
டுயோஸ்கா டூயத்லான்(ஸ்பிரிண்ட்) - ஆண்கள்:
வெற்றியாளர்: லோகிதாஸ் ராஜசேகரன் - 1:25:56
இரண்டாம் இடம்: கிருஷ்ணன் எம் - 1:32:17
மூன்றாம் இடம்: ஹரிஹரசுதன் பி - 1:33:23
டுயோஸ்கா டூயத்லான் (ஸ்பிரிண்ட்) - பெண்கள்:
வெற்றியாளர்: அனி வர்மா - 1:35:57
இரண்டாம் இடம்: எலினோர் கிராஸ் - 1:40:58
மூன்றாம் இடம்: ராஷிகா பாலகிருஷ்ணன் - 1:59:13


Click it and Unblock the Notifications