Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் சென்னை.. இவங்கதான் தமிழ் மக்கள்.. இங்கிலாந்து வீரர்களை உணர்ச்சிவசப்பட வைத்த சம்பவம்.. செம!

சென்னை: இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னையில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி வலுவான ஸ்கோரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை இந்திய அணி இங்கிலாந்தை விட 372 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

கோலி அரைசதம் அடித்து அசத்தி உள்ளார். அஸ்வின் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி 6 விக்கெட்டிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.

ஓவர்

ஓவர்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னையில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. வரிசையாக ரோஹித், புஜாரா, பண்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது.

எப்படி

எப்படி

இதற்கு காரணமாக இங்கிலாந்து அணியின் கீப்பர் பென் போக்ஸ்தான். இவர்தான் புஜாராவை ரன் அவுட் செய்தார். அதேபோல் ரோஹித் சர்மா மற்றும் பண்டை ஸ்டம்பிட் செய்தார். இதனால்தான் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.

பென் போக்ஸ்

பென் போக்ஸ்

இன்று பென் போக்ஸ் மிகவும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். இவரின் விக்கெட் கீப்பிங் காரணமாக இந்திய அணி பெரிய அளவில் திணறி வருகிறது. இன்று பென் போக்ஸுக்கு பிறந்தநாள். தனது பிறந்த நாளில் பென் போக்ஸ் மிகவும் சிறப்பாக கீப்பிங் செய்து அதிரடி காட்டி வருகிறார்.

சென்னை மக்கள்

சென்னை மக்கள்

இந்த நிலையில் பென் போக்ஸை இன்று சென்னையில் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்தினார்கள். அவர் உணவு இடைவேளைக்கு பின் கீப்பிங் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது ஹாப்பி பர்த்டே பென் போக்ஸ் என்று கூறி வாழ்த்து தெரிவித்தனர்.

உணர்ச்சி

உணர்ச்சி

இதை பார்த்து திடீரென பென் போக்ஸ் உணர்ச்சிவசப்பட்டார். இங்கிலாந்து வீரர்களும் தமிழர்களின் செயலை பார்த்து வியந்து போனார்கள். தமிழர்களை பார்த்து சிரித்துக்கொண்டே பென் போக்ஸ் பின் மைதானத்திற்கு சென்றார். இந்த சம்பவம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

வைரல்

வைரல்

பொதுவாக தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் அணி வேறுபாடு பார்க்காமல் செயல்படுவார்கள். எந்த வீரர் சிறப்பாக ஆடினாலும் தமிழக ரசிகர்கள் அவர்களை பாராட்டுவார்கள். இதனால்தான் தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அதிக அறிவு மிக்க ரசிகர்கள் என்று அழைப்பார்கள்.. தற்போது தமிழர்கள் அதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

Story first published: Monday, February 15, 2021, 14:47 [IST]
Other articles published on Feb 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+