Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவமானத்தை ஏற்க முடியாது.. சென்னையில் இங்கிலாந்துக்கு காத்திருக்கும் பேரிடி.. பிசிசிஐயின் அஸ்திரம்!

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக சென்னை பிட்ச் மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி தற்போது சென்னையில் படுதோல்வி அடைந்துள்ளது. இதில் கோலியின் கேப்டன்சி பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கும் அளவிற்கு இல்லை.

227 ரன்களை வித்தியாசத்தில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தி உள்ளது. இதனால் மீதம் உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

மாற்றம்

மாற்றம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக சென்னை பிட்ச் மொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் சென்னை பிட்ச் ஸ்விங் ஆகவில்லை. முதல் நான்கு நாட்கள் பிட்சில் எதுவும் நடக்கவில்லை. 5வது நாள் மட்டுமே பிட்ச் ஸ்விங் ஆனது.

மோசம்

மோசம்

இதன் காரணமாக ஐந்தாவது நாளில்தான் இந்திய அணியால் பேட்டிங் செய்ய முடியாமல் போய் விக்கெட் விழுந்தது. சென்னை பிட்சை பார்த்து இந்திய வீரர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து அணி வீரர்களும் கோபம் அடைந்தனர். பிட்ச் எதற்கும் சரிப்பட்டு வரவில்லை என்று கோபத்தில் இருந்தனர்.

அவமானம்

அவமானம்

இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கோபம் அடைந்துள்ளது. இதை தனிப்பட்ட வகையில் மானப்பிரச்சனையாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இதனால் பிட்சை ஒரே வாரத்தில் மொத்தமாக மாற்றியுள்ளனர்.

செம்மண்

செம்மண்

இங்கு இருக்கும் செம்மண் மற்றும் புற்தரையை நீக்கி உள்ளனர். இதனால் பிட்ச் முழுக்க முழுக்க பழைய சிஎஸ்கே பிட்ச் போல மாறியுள்ளது. இதனால் சென்னை பிட்ச் முதல் நாளில் இருந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். அதேபோல் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி நன்றாக ஸ்விங் ஆகும்.

விக்கெட்

விக்கெட்

இது இந்திய அணிக்கு கண்டிப்பாக உதவும். முதல் நாளில் இருந்தே பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும். இதனால் இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் இங்கு பெரிய அளவில் பங்களிப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பிட்சின் மதிப்பை மீட்கும் ஆட்டமாக இரண்டாவது டெஸ்ட் இருக்கும் என்கிறார்கள்.

Story first published: Saturday, February 13, 2021, 0:00 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+